அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் தீர்த்தோற்சவம்!- அலையெனத் திரண்ட பக்தர்கள்...




கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமரிசையாக நடைபெற்று வருகின்றது.
இராமாயண காலத்திற்கு முற்பட்ட ஆலயமாகவுள்ள மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயமானது இராமபிரான், இராவணன் ஆகியோர் வழிபட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான வருடாந்த மகோற்சவத்தில் தினமும் தம்பபூஜை வசந்த மண்டப பூஜை சுவாமி உள்வீதி மற்றும் வெளிவீதியுலா என்பன நடைபெற்று வருகின்றன.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்ஸ்வத்தின் தேர் உற்சவம் நேற்று காலை சிறப்பாக நடைபெற்றது.

இன்று காலை மூலமூர்த்திக்கு விசேட அபிசேக ஆராதனை நடைபெற்று, திருப்பொற்சுண்ணம் இடிக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் விசேட பூஜையுடன் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளிய மாமாங்கேஸ்வரர் வரலாற்று சிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் எழுந்தருளியதுடன் அங்கு விசேட அபிசேக ஆராதனையை தொடர்ந்து சிறப்பு வாய்ந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இறந்த உறவுகளின் ஆன்ம ஈடேற்றத்திற்கான உற்சவமாகவும் நோய்பிணியை தீக்கும் நிகழ்வாகவும் மாமாங்கஸேவரர் தீர்த்தோற்சவம் கருதப்படுகின்றது.

இந்த தீர்த்தோற்சவத்திற்கு இலங்கை உட்பட பல நாடுகளில் இருந்து இலட்சக்கணக்கானோர் பங்குகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 



















மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் தீர்த்தோற்சவம்!- அலையெனத் திரண்ட பக்தர்கள்... Reviewed by Author on August 14, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.