அண்மைய செய்திகள்

recent
-

சாரண அணித்தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி பாசறை-Photos




மன்னார் வலய கல்வித்திணைக்களம் மன்னார் மாவட்ட சாரண சங்கத்துடன் இணைந்து மன்னார் கல்வி வலய சாரண அணித்தலைவர்களுக்கான 03 நாள் வதிவிட தலைமைத்துவ பயிற்சி பாசறையை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் 31.07.2015 முதல் 02.08.2015 வரை மிகவும் சிறப்பாக நடாத்தி முடித்தது.

இதில் சாரணர் படையணி இயங்கும் 25 பாடாலைகளில் இருந்து தலா 04 சாரண அணித்தலைவர்கள் வீதம் தெரிவுசெய்யப்பட்ட 100 சாரண அணித்தலைவர்கள் பங்குபற்றினர்.

இப்பயிற்சிப் பாசறையானது மன்னார் வலய கல்விப்பணிப்பாளர் உயர்திரு எம்.எம் சியான் அவர்களின் வழிகாட்டலிலும் நெறிப்படுத்தலிலும் வலய உதவிக்கல்விப்பணிப்பாளரும் மன்னார் மாவட்ட சாரணர் சங்க மாவட்ட ஆணையாளருமாகிய திரு ப.ஞானராஜ் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
இப்பயிற்சிப் பாசறையில் இலங்கை சாரணர் சங்க யுடுவு தரமுடைய வளவாளர்கள் இருவரும் wood badgeதரமுடை ய வளவாளர்கள் மூவரும் அடங்கலாக பத்து வளவாளர்கள் பங்குபற்றி சிறப்பான பயிற்சியை வழங்கினர். அத்துடன் பயிற்சியின் நிறைவில் 37 சாரணர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும் நடைபெற்றது.

இப்பயிற்சிப்பாசறையானது மிகவும் சிறப்பாக நடைபெற உதவி புரிந்த சகலருக்கும் மன்னார் வலயக்கல்வித்திணைக்களத்தினதும் மன்னார் மாவட்ட சாரணர் சங்கத்தினதும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.















சாரண அணித்தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி பாசறை-Photos Reviewed by NEWMANNAR on August 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.