அண்மைய செய்திகள்

recent
-

பேசாலை வெற்றி மாங்குடியிருப்பு பகுதியில் முகாம் அமைப்பதற்கான தேவை கடற்படையினருக்கு இல்லை- எஸ்.பிரிமூஸ் சிறாய்வா.



மன்னார் பேசாலை வெற்றி மாங்குடியிருப்பு கிராமத்தில் உள்ள 3 ஏக்கர் வீஸ்தீரணம் கொண்ட காணியை கடற்படையினர் அபகரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமையினை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வண்மையாக கண்டிப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தெரிவித்துள்ளார்.

இவ் விடையம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத்தெரிவிக்கையில்,,,

பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்திற்குச் சொந்தமான வெற்றிமாங்குடியிறுப்பு என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஏறத்தாள 210 ஏக்கர் வீஸ்தீரணம் கொண்ட காணியிலே 3 ஏக்கர் காணியினை கடந்த சில தினங்களாக கடற்படையினர் தமது தேவைக்கென சுவீகரிப்புச் செய்ய வந்த நேரத்தில் அந்த முயற்சியானது பேசாலை ஆலைய அருட்பணி பேரவையுடன் கிராம மக்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் பின்னனியிலே கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் அங்கு வந்து தற்காலிகமாக கடற்படையினர் படை முகாம் ஒன்றை அமைக்க முற்பட்ட போது அருட்தந்தையும்,பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய அருட்பணிச்சபையினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த படை முகாம் அமைப்பதை தடுத்தனர்.

இந்த நிலையில் இப்பணிக்கு பொறுப்பாக வந்திருந்த கடற்படை பொறுப்பதிகாரி தற்காலிகமாக சிறிது காலம் இங்கு இருப்போம் என்றும் பின் சென்று விடுவோம் என கூறினர்.

ஆனால் கடந்த 10 வருடங்களாக கடற்படையினர் குறித்த இடத்தை விட்டு வெளியேறுவதாக இல்லை.

ஆனால் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் உள்ள 3 ஏக்கர் அளவுள்ள காணியை கடற்படையினருக்கு அளந்தெடுப்பதற்கான முயற்சிகள் இடம் பெற்றது.

இக்காணியானது மன்னார் மறைமாவட்ட ஆயருக்குச் சொந்தமானது.

இக்காணி தெண்னை,பனை மரங்களை கொண்டதாக மிகவும் பலனைத் தரக்கூடியதாக காணப்படுகின்றது.

இந்த நிலையில் அரசாங்கம் எவ்வித முன் அறிவித்தலும் இன்றி இக்காணியை அபகரிக்க முயற்சி அசெய்துள்ளது.

இந்த அரசாங்கம் நல்லாட்சி,நல்லாட்சி என்று கூறிக்கொண்டு இந்த நாட்டில் சமாதானத்தை விரும்புகின்ற அரசாங்கம் என கூறிக்கொள்ளும் இவ் அரசாங்கம் இவ்வாறாக தனியார் காணிகளையும்,பொதுமக்களின் காணிகளையும் எவ்வித முன் அறிவித்தலும் இன்றி யாருக்கும் தெரியாது நில அளவை செய்து நிறந்தரமாக தமது படை முகாம்களை அமைப்பதற்கு எடுக்கின்ற இந்த முயற்சியினை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் இக் காணி சுவீகரிப்புச் செயற்பாட்டை நான் கண்டிக்கின்றேன்.

-அரசாங்கம் தமது வசமிருக்கும் பொதுமக்களின் காணிகளை மீண்டும் பொதுமக்களிடம் மீளக்கையளிக்கின்றோம.

அவற்றை நாங்கள் கையகப்படுத்தவில்லை என வெளிப்படையாக கூறினாலும் கூட மறைமுகமாக அரசாங்கம் வடக்கு-கிழக்கிலே விசேடமாக வடக்கிலே முப்படையினர் தமது நிலையினை விரிவு படுத்துகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக முப்படையினர் தமது நிலைகளில் இருந்து விட்டுக்கொடுக்காத நிலை இந்த நில அளவை இடம் பெறுகின்றது.

ஆகவே இந்த நிகழ்வினை நாங்கள் வண்மையாக கண்டிப்பதோடு குறித்த இடத்திலே கடற்படை முகாமை அமைக்காது அப்புறப்படுத்த வேண்டும்.

குறித்த கடற்படை முகாம் அமைக்க இருக்கும் இடத்திற்கு அருகே 50 வீட்டுத்திட்ட பயணாளிகள் வாழ்ந்து வருகின்றனர்.

அப்பிரதேசத்திலே கடற்படை முகாம் அமைக்க வேண்டிய தேவைகள் எவையும் இல்லை.என அவர் மேலும் தெரிவித்தார்.
பேசாலை வெற்றி மாங்குடியிருப்பு பகுதியில் முகாம் அமைப்பதற்கான தேவை கடற்படையினருக்கு இல்லை- எஸ்.பிரிமூஸ் சிறாய்வா. Reviewed by NEWMANNAR on August 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.