அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வளர்பிறை பெண்கள் அமைப்பினால் பாதிக்கப்பட்ட கிராம மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை.-Photos

மன்னார் வளர்பிறை பெண்கள் அமைப்பினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள சில கிராம மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைக்க கோரி தொடர்ச்சியாக உயர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நேற்று வியாழக்கிழமை(6) மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் தலைமையில் விசேட கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் வளர்பிறை பெண்கள் அமைப்பின் பொறுப்பதிகாரி ஜே.பிரியந்தா தெரிவித்தார்.

இது தொடர்பாக மன்னார் வளர்பிறை பெண்கள் அமைப்பின் பொறுப்பதிகாரி ஜே.பிரியந்தா மேலும் தெரிவிக்கையில்,,,,

தோட்டவெளி ஜோசாப்வாஸ்நகர்,போசாலை 50 வீட்டுத்திட்டம் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டம், ஜீவபுரம், ஜீம்றோன்நகர், உப்புக்குளம்,சாந்திபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள அடிப்படை தேவைகள் தொடர்பாக கடந்த 24.09.2014 அன்று உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் அமைதி ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டு அரசாங்க அதிபருக்கு அகஜரும் கையளிக்கப்பட்டது.

குறிப்பாக வீட்டுத்திட்டம்,குடி நீர்,மலசல கூடம்,தெரு விளக்கு,சமுர்த்தி,உள்ளக வீதி,போக்குவரத்து வசதி போன்ற அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க கோரியே குறித்த அமைதி ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால்
அதற்கு பதில் எதிவும் கிடைக்காத நிலையில் தொடர்ச்சியாக உரிய அதிகாரிகளுக்கு நினைவூட்டல் கடிதங்கள் தொடர்ச்சியாக அனுப்பி வைக்கப்பட்டது.

-அதன் பலனாக நேற்று வியாழக்கிழமை(6)மன்னார் பிரதேசச் செயலகத்தில் மன்னார் பிரதேசச் செயலாளரினால் விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் வளர்பிறை பெண்கள் அமைப்பின் தலைவர் பபியோலா, செயலாளர் றீற்றா மற்றும் ஏனைய கிராம மட்ட பிரதி நிதிகள், பிரதேச மன்னார் செயலக உதவி திட்ட பணிப்பாளர், மாவட்ட செயலகம் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர், ,சமுர்த்தி முகாமையாளர் உற்பட சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதில் தீர்க்க கூடிய பிரச்சனைகளை உடனடினாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் இப் பிரச்சனைகளை அமையப்படுத்தி ஓர் செயற்திட்ட கோவையினை தயார் செய்து தரும் படியும் இப்பிரச்சனைகள் தொடர்பாக மேலதிகாரிகளுடன் கலந்துரையாடுவதாகவும் மன்னார் பிரதேசச் செயலாளர் குறித்த கலந்துரையாடலில் தெரிவித்ததாக மன்னார் வளர்பிறை பெண்கள் அமைப்பின் பொறுப்பதிகாரி ஜே.பிரியந்தா மேலும் தெரிவித்தார்.






மன்னார் வளர்பிறை பெண்கள் அமைப்பினால் பாதிக்கப்பட்ட கிராம மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை.-Photos Reviewed by NEWMANNAR on August 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.