அண்மைய செய்திகள்

recent
-

விண்வெளி விவசாயத்தில் அறுவடையாக்கப்பட்ட விளைபொருள் உணவாகிறது...

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
விண்­வெ­ளிக்குத் தமது ஆய்வு உப­க­ர­ணங்­களை ஆய்­விற்­காக அனுப்­பு­கையில் அதிக சிர­மங்கள் எதிர்­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை. எடுத்துச் செல்­லப்­ப­யன்­படும் உந்து இயந்­தி­ரத்தின் கொள்­ள­ளவிற்கு ஏற்ற திணி­வி­லான ஆய்வு உப­க­ர­ணங்களை உள்­ள­டக்கி அந்த விண்­ப­ய­ணங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. ஆனால், ஆய்­விற்­காக விண்­வெளி வீரர்­களை அனுப்­பு­கையில் பல்­வேறு விட­யங்­களை கருத்­திற்­கொள்­வது அவ­சியம்.



வீரர்கள் பய­ணிக்கும் விண்­க­லத்தில் ஆய்வு உப­க­ர­ணங்­க­ளுடன், ஆய்­வா­ளர்­க­ளுக்குத் தேவை­யான உணவு, சுவா­சிக்க ஒட்­சிசன் வாயு மற்றும் அருந்­து­வ­தற்கு நீர் என சரா­சரி மனி­த­ருக்கு அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­வற்­றினை, அவர்­களின் பய­ணக்­கா­லத்­திற்குப் போது­மான அள­விற்கு அனுப்பி வைப்­பது அவ­சியம். இந்த அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் திணிவு விண்­வெளிப் பய­ணத்­திற்கு ஒரு சவா­லான விட­ய­மாகத் திகழ்­கின்­றது. ஏனெனில், இப்­பொ­ருட்­களை எடுத்­துச்­செல்­வ­தற்­காக ஆய்வு உப­க­ர­ணங்­களின் எண்­ணிக்­கையைக் குறைக்க­ வேண்­டிய அழுத்­தத்­திற்கு பயண ஏற்­பாட்­டா­ளர்கள் உள்­ளா­கின்­றனர்.

எனவே, இச்­ச­வா­லினைச் எதிர்­கொள்­வ­தற்­கான வழி­மு­றை­களில் ஒன்­றாக, விண்­வெ­ளியில் விவ­சாய முயற்­சி­களை மேற்­கொள்­வ­தற்கு எடுத்த ஆய்­வா­ளர்­களின் முயற்சி வெற்றி பெற்று, கடந்த 10 ஆம் திகதி முதற் தட­வை­யாக விண்­வெ­ளியில் விளைந்த ‘லெற்றிஸ்’ (lettuce) தாவர இலை­களை ஆய்­வா­ளர்கள் தமது உண­வாக்­கி­யுள்­ளனர்.

நாம் வாழும் பூமியில் தாவ­ரங்­களே எமது உயிர்­வாழ்வின் ஆதா­ர­மாகத் திகழ்­கின்­றன. எமது மற்றும் விலங்­கு­களின் நுகர்­விற்­கான விளை­பொ­ருட்­களைத் தரு­வ­துடன், இத்­தா­வ­ரங்­களில் நடை­பெறும் ஒளித்­தொ­குப்பின் மூலம் வெளி­வரும் ஒட்­சிசன் வாயு உயி­ரி­னங்­களின் சுவா­சத்­திற்கு துணை புரி­கின்­றது.

தாவரம் வளர்­வ­தற்கு ஏற்ற சூழ்­நி­லை­களை விண்­வெ­ளியில் ஏற்­ப­டுத்திக் கொடுத்தால், அத்­தா­வரம் வளர்ந்து உண­வினைத் தரும் அதே­வேளை, ஆய்­வா­ளர்­களின் வெளிச் சுவா­சத்தில் வெளி­யேறும் காப­னீ­ரொட்சைட் வாயு­வினைப் பயன்­ப­டுத்தி ஒட்­சிசன் வாயு­வி­னையும் உற்­பத்தி செய்யும். மேலும், ஏலவே தயா­ரிக்­கப்­பட்ட பழைய உண­வு­களைத் தொடர்ந்து உண்டு சலித்­துப்­போன விண்­வெளி வீரர்­க­ளுக்கு தாவ­ரத்­தி­லி­ருந்து உடன்­ப­றிக்­கப்­பட்ட தாவர உண­வுகள் உற்­சா­கத்­தினை வழங்கும். எனவே, விண்­வெளி ஆய்­வு­க­ளுக்­கான பரி­சோ­தனைக் கள­மாகத் திகழும் சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்தில் விண்­வெளி விவ­சாய நட­வ­டிக்­கைகள் அமெ­ரிக்­காவின் விண்­வெளி ஆய்வு நிறு­வ­ன­மான ‘நாஸா’ (NASA ) வினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

விண்­வெ­ளியில் தாவ­ரங்­களை வளர்ப்­ப­தற்­கான ஆதா­ரங்­களை Orbital Technologies Corp என்ற நிறு­வனம் ஒப்­பந்த அடிப்­ப­டையில் தயா­ரித்து வழங்­கி­யது. இத­னுள்ளே தாவர விதைகள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­த­துடன், தாவ­ரங்­க­ளுக்­கான பசளை வகை­களை உரிய வகையில் வழங்கும் தொகு­தியும் ஒரு­வகைக் களி­மண்ணும் உள்ளே காணப்­பட்­டன. இத்­தா­வ­ரங்­க­ளுக்கு ஒளி­யினை வழங்­கு­வ­தற்­காக சிவப்பு, நீலம் மற்றும் பச்சை நிற ஒளி­களை வழங்கும் இரு­வா­யி­களும் இத்­தா­வர வளர்ப்புத் தொகு­தியில் இணைக்­கப்­பட்­டி­ருந்­தன.

ஒளி­காலும் இரு­வா­யிகள் தரும் ஒளியில் தாவ­ரங்­களை வளர்க்கும் பொறி­முறை நுட்பம் 1990 களில் கண்­ட­றி­யப்­பட்­டி­ருந்­தது. இதில் நீலம் மற்றும் சிவப்பு ஒளி­களை வழங்­கு­வது சக்தி வினைத்­தி­ற­னு­டை­ய­தாக அமை­வ­துடன், தாவர வளர்ச்­சியில் அதிக பங்­க­ளிப்பு செய்­வதும் ஆய்­வா­ளர்­களால் அறி­யப்­பட்­டி­ருந்­தது. ஆனால், விளை­வாகும் விளை­பொ­ருள்கள் மீதான ஊதா நிறப்­ப­டர்வுத் தோற்றம் மனி­தரின் நுகர்வு நாட்­டத்­தினைக் குறைப்­ப­தாக அமைந்­தது. எனவே, பச்சை நிற ஒளி­தரும் ஒளி­மு­தலும் இத­னுடன் இணைக்­கப்­பட்­டது. இக்­கட்­ட­மைப்­புக்கள் புவி மேற்­ப­ரப்பில் பரி­சோ­திக்­கப்­ப­ட்ட அதே­வேளை, இரு தாவர வளர்ப்புத் தொகு­திகள் 2014 ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதத்தில் சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­திற்கு எடுத்துச் செல்­லப்­பட்­டி­ருந்­தன.

இவற்றில் ஒரு தாவர வளர்ப்புத் தொகுதி 2014 மே மாதத்தில் விண்­வெளி ஆய்­வாளர் Steve Swanson இனால் வளர அனு­ம­திக்­கப்­பட்­டது. அந்த ஆய்­வா­ளரின் பரா­ம­ரிப்பில் வளர்ந்த ‘லெற்றிஸ்’ தாவர இலைகள் 33 நாட்கள் வளர்ச்­சியின் பின்னர் அறு­வடை செய்­யப்­பட்டுப் பின்னர், 2014 ஆண்டு ஒக்­டோ­பரில் புவிக்கு எடுத்து வரப்­பட்­டி­ருந்­தன. அத்­தா­வர அறு­வ­டைகள் பல்­வேறு பரி­சோ­தனைகளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு அது உண­வாகப் பயன்­ப­டுத்­தத்­தக்­கதா? என பரி­சோ­திக்­கப்­பட்டு அதன் பாது­காப்புத் தன்மை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

இதன் இரண்டாம் கட்டப் பரி­சோ­த­னை­யாக மற்­றொரு ‘லெற்றிஸ்’ தாவர வளர்ப்புத் தொகுதி கடந்த ஜுலை மாதம் 8 ஆம் திகதி வளர விண்­வெளி வீரர் Scott Kelly ஆல் அனு­ம­திக்­கப்­பட்டு, 33 நாட்­களின் பின்னர், கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி அறு­வடை செய்­யப்­பட்­டது. அறு­வடை செய்­யப்­பட்ட ‘லெற்றிஸ்’ தாவர இலை­களின் மேற்­ப­ரப்­பினை உரிய வேதிப்­ப­தார்த்­தங்­களால் தூய்­மைப்­ப­டுத்­திய பின்னர் அதில் பாதியினை மூன்று விண்வெளி வீரர்களும் உணவாக உட்கொண்டனர். மீதியினை குளிர்ப்பதனப் பெட்டியில் இட்டு பாதுகாப்பாக வைத்துள்ளனர். அது பின்னர் புவிக்கு எடுத்துவரப்பட்டு மேலதிக ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படவுள்ளது.

இந்த விண்வெளி விவசாயம் குறித்த ஆய்வு முயற்சி விண்வெளி ஆய்வுகளில் புதியதொரு பரிணாம மாற்றத்தினை ஏற்படுத்த இருப்பதுடன், விண்வெளியில் மனிதக் குடியேற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பான கனவு நனவாகும் என்ற நம்பிக்கைக்கும் அடித்தளமிட்டுள்ளது.

விண்வெளி விவசாயத்தில் அறுவடையாக்கப்பட்ட விளைபொருள் உணவாகிறது... Reviewed by Author on August 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.