அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் நீதி, நேர்மையான தேர்தலை நடத்துவதற்கான சூழல்...

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
நீதியான, சுயாதீனமான தேர்தலொன்றை நடத்துவதற்கான அமைதிச் சூழல் வடக்கில் காணப்படுகின்றது. தேர்தலுக்கு சில மணித்தியாலங்கள் இருக்கும் நேரத்தில் அங்கு இடம்பெற்றிருக்கும் கைக்குண்டுத் தாக்குதல்கள் கவலையளிப் பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்தது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களான மாவை சேனாதிராஜா வின் அலுவலகம் மற்றும் ஸ்ரீகாந்தாவின் வீடுஎன்பவற்றின் மீதுநேற்றுமுன்தினம் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டி ருப்பதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் கூறினார்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் வடபகுதி மக்கள் எதுவித அச்ச மனப்பான்மையுமின்றி தேர்தல் நடவடிக்கைகளில் பங்கெடுத்துள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் ஆகியோரின் அச்சுறுத்தல் இன்றி வேட்பாளர்கள் பிரசாரங்களை முன்னெடுக்கக் கூடிய சூழல் ஏற்பட்டிருப்பதாக கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டினார்.

வேட்பாளர்கள் மாத்திரமன்றி கண்காணிப்பாளர்களான தாம் கூட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளுக்குச் சென்று வாக்காளர்களை விழிப்புணர்வூட்டுவதற்கான சாதகமான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கீர்த்தி தென்னக்கோன் கூறினார்.

இதுவரை காலமும் வடக்கில் அமைதியான நிலை காணப்பட்டு வந்தபோதும் தேர்தலுக்கு சில மணித்தியாலங்களே இருக்கும் நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் இருவரின் வீடுகள் மீது ஒரே மாதிரியான கைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் எமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஒரே மாதிரியான குண்டுகளே வீசப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கில் நீதி, நேர்மையான தேர்தலை நடத்துவதற்கான சூழல்... Reviewed by Author on August 17, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.