வாக்காளர் அட்டைகளை தபால் நிலையங்களில் இன்றும் பெறலாம்...
வாக்காளர் அட்டை கிடைக் காதவர்கள் தேர்தல் தினமான இன்று (17)ஆம் திகதியும் தத்தம் தபால் நிலை யங்களுக்கு சென்று தம்முடைய வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாமென தபால் மா அதிபர் டீ. எல். பீ. ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள சகல தபால் நிலையங்களும் வாக்காளர் அட்டைகளை வாக்காளர்கள் பெற்றுக்கொள்ளத் நேற்று ஞாயிறன்றும் மாலை 04 மணிவரை திறந்து வைக்கப்பட்டது.
வாக்காளர் கார்ட் விநியோகத்தின்போது வீட்டுவாசிகள் வீடுகளில் இல்லாத நேரம் அவற்றை விநியோக்க முடியவில்லை.
97 வீத வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டதாக அபேரத்ன தொடர்ந்து தெரிவித்தார்.
வாக்காளர் அட்டைகளை விநியோகிப் பதற்காக விசேட நாட்களும் ஒதுக்கப்பட்டன.
8500 தபால்காரர்கள் வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்காக கட மையில் அமர்த்தப்பட்டதாகவும் அபேரத்ன மேலும் தெரிவித்தார்.
வாக்காளர் அட்டைகளை தபால் நிலையங்களில் இன்றும் பெறலாம்...
Reviewed by Author
on
August 17, 2015
Rating:

No comments:
Post a Comment