அண்மைய செய்திகள்

recent
-

அரசியல் கைதிகள் சந்தேகத்தின் அடிப்படையிலே பல வருடங்களாக சிறைவைக்கப்பட்டுள்ளனர்- அந்தோனி சகாயம்.


மன்னார் பிரஜைகள் குழுவினால் 8 மாவட்டங்களில் இருந்து காணாமல் போனவர்கள் தொடர்பாக 4578 விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும்,அதில் 3302 விண்ணப்பப்டிவங்கள் விசாரனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் முன்னாள் உப தலைவர் அந்தோனி சகாயம் தெரிவித்தார்.



மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று(5) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு 3302 விண்ணப்பங்கள் விசாரனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதும் அதில் 2 ஆயிரம் விண்ணப்பங்கள் விசாரனை செய்யப்பட்டுள்ளது.

விசாரணை  செய்யப்பட்ட விண்ணப்பங்களின் உண்மைத்தன்மைகள் எவையும் இது வரை வெளி வரவில்லை.அவர்களுக்கான பதிலும் கூறப்படவில்லை.மேலும் 1803 நபர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.18-05-2009 ஆம் ஆண்டு 252 போராளிகள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இன்று வரை அந்த போராளிகளின் நிலையும் தெரியவில்லை.உறவினர்களுக்கும் எத்தகவலும் வழங்கப்படாத நிலையில் இந்த அரசாங்கம் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது.200 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அரசியல் கைதிகளின் வழக்கை நாங்கள் சற்று நோக்கும் போது அவர்கள் கைது செய்யப்படும் போது கையில் எந்தப்பொருட்களையும் வைத்திருக்காதவர்களாகத்தான் அங்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் சந்தேக நபர்கள் என்ற அடிப்படையிலே பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.அரசியல் கைதிகளின் உறவினர்கள் பல்வேறு கஸ்ட துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.இந்த அரசாங்கம் தென்பகுதியில் உண்மையான குற்றவாழிகளை பொது மன்னிப்பு என்ற அடிப்படையில் விடுதலை செய்துள்ளது.

எனவே இந்த அரசாங்கத்திடம் நாங்கள் கருணையாக கேட்கின்றோம்.அரசிலியல் கைதிகளின் குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும்.மேலும் கடத்தல் தொடர்பாக 1803 நபர்களுடைய விபரங்கள் உரிய திணைக்களங்களில் பதியப்பட்டுள்ளது.அந்த விபரங்கள் உறவினர்களுக்கு விபரமாக வழங்கப்பட வேண்டும்.

தற்போதைய பாராளுமன்ற தேர்தலில் கூட காணாமல் போனவர்களை சிலர் கேடையமாக பயண்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக காணாமல் போனவர்களை கண்டு பிடித்து தருகின்றோம்,அவர்கள் இருக்கின்ற இடங்களை காட்டுகின்றோம் என கூறுகின்றனர்.

அண்மையில் பத்திரிக்கை ஒன்றில் கூட அரச அரசியல் பின்புலத்துடன் விளம்பரம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.எனவே காணாமல் போனவர்களை வைத்து அரசியல் மேடை போட வேண்டாம்.என கேட்டுக்கொள்ளுகின்றேன்.என மன்னார் பிரஜைகள் குழுவின் முன்னாள் உப தலைவர் அந்தோனி சகாயம் மேலும் தெரிவித்தார்.
அரசியல் கைதிகள் சந்தேகத்தின் அடிப்படையிலே பல வருடங்களாக சிறைவைக்கப்பட்டுள்ளனர்- அந்தோனி சகாயம். Reviewed by NEWMANNAR on August 05, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.