வெள்ளத்தால் இந்தியாவில் 100 இற்கும் மேற்பட்டோர் மரணம்

மழை வெள்ளம் காரணமாக 100 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக இந்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
பருவ மழை காரணமாக கடந்த வாரம் முதல் இவ்வாறான உயிரிழப்பு அதிகரித்து வருவதாக அவ்வமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் வீசிய புயல் மற்றும் மழை காரணமாக சுமார் 10 ஆயிரம் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர். மேற்கு வங்காளத்தில் மாத்திரம் 48 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் இந்தியாவில் 100 இற்கும் மேற்பட்டோர் மரணம்
Reviewed by Author
on
August 03, 2015
Rating:

No comments:
Post a Comment