காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை சம்பவத்திற்கு இன்று 25 வருடம்

காத்தான்குடியில் கடந்த 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 03 ஆம் திகதி இடம்பெற்ற பள்ளிவாயல் படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவு நாளான இன்று (03) காலை சுஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
காத்தான்குடி ஹுஸைனிய்யா பள்ளிவாயலில் இடம்பெற்ற படு கொலையில் உயிரிழந்தவர்களின் நினைவாக இன்று காலை விசேட குர்ஆன் ஓதப்பட்டதுடன் பிராத்தனையும் நடைபெற்றது.
இதில் உலமாக்கள் ஹுஸைனிய்யா பள்ளிவாயல் நிருவாகிகள் மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் சுஹதாக்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
காத்தான்குடியில் கடந்த 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 03 ஆம் திகதி இரவு காத்தான்குடி மீரா ஜும் ஆப்பள்ளிவாயல் மற்றும் காத்தான்குடி முதலாம் குறிச்சி ஹ{ஸைனிய்யா பள்ளிவாயல் ஆகிய இரண்டு பள்ளிவாயல்களிலும் இஸாத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிப்பிரயோகம் மற்றும் குண்டுத்தாக்குதலில் 103 பேர்; படுகொலை செய்யப்பட்டதுடன் 45 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தினத்தை சுஹதாக்கள் தினமாக வருடாந்தம் நினைவு கூரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதுA
காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை சம்பவத்திற்கு இன்று 25 வருடம்
Reviewed by Author
on
August 03, 2015
Rating:

No comments:
Post a Comment