14ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டி : இலங்கைக்கு மூன்றாவது தோல்வி...
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
14ஆவது உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகளில் குழு 'சி'யில் பங்குபற்றும் இலங்கை நேற்றைய தினம் தனது மூன்றாவது நேரடித் தோல்வியைத் தழுவி ஏமாற்றம் அடைந்தது.
உலக வலைப்பந்தாட்ட அணிகளுக்கான தரப்படுத்தலில் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ள தென் ஆபிரிக்காவை சிட்னி ஒலிம்பிக் பார்க்கில் அமைந்துள்ள ஆல்ஃபோன்ஸ் எரினா உள்ளக அரங்கில் எதிர்கொண்ட இலங்கை 17 க்கு 89 கோல்கள் என்ற அடிப்படையில் தோல்வி அடைந்தது.
இந்த இரண்டு நாடுகளும் 52 வருடங்களுக்கு முன்னர் சந்தித்துக்கொண்டபோது 48 க்கு 26 கோல்கள் என்ற அடிப்படையில் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றிருந்தது.
இந்த 53 வருடங்களில் தென் ஆபிரிக்கா வலைப்பந்தாட்டத்தில் பாரிய முன்னேற்றம் அடைந்துள்ளதையும் இலங்கை பின்னடைவு கண்டுள்ளதையும் நேற்றைய போட்டி முடிவு தெளிவுபடுத்துகின்றது.
தென் ஆபிரிக்கா 100 முயற்சிகளில் 89 கோல்களையும் இலங்கை 28 முயற்சிகளில் 17 கோல்களையும் போட்டுள்ளமை இரண்டு நாடுகளினதும் நிலை யை மேலும் உறுதிப்படுத்துகின்றது.
இந்த வெற்றியுடன் முதல் எட்டு அணிகளுக்கான சுற்றில் விளையாடுவதற்கு குழு 'சி' யிலிருந்து மலாவியுடன் தென் ஆபிரிக்கா இணைந்துகொண்டுள்ளது.
தென் ஆபிரிக்க வீராங்கனைகளின் உயரம், வியூகம், வேகம் ஆகியவற்றுக்கு இலங்கை வீராங் கனைகளினால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பது ஒவ்வொரு கால் மணி நேரப் பகுதிகளிலும் பதிவான கோல்கள் நிலை எடுத்துக் காட்டுக்கின்றது.
நான்கு கால் மணி நேரப் பகுதிகளிலும் முறையே 25 க்கு 7, 16 க்கு 5, 24 க்கு 4, 24 க்கு 1 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை வகித்த தென் ஆபிரிக்கா ஒட்டுமொத்த நிலையில் 89 க்கு 17 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

Reviewed by Author
on
August 11, 2015
Rating:

No comments:
Post a Comment