தன்னை விடவும் மேம்படுத்தப்பட்ட ரோபோக்களை சுயமாக உருவாக்கும் ரோபோ முறைமை உருவாக்கம்...
தன்னைத் தானே மேம்படுத்தி தனது செயற்பாடுகளை விருத்தி செய்யக் கூடிய வல்லமையைக் கொண்ட ரோபோ முறைமையொன்றை பொறியியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதன் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள ரோபோ கரமானது மனித தலையீடு இன்றி தன்னை விடவும் முன்னேற்றகரமாக செயற்படக்கூடிய ரோபோக்களை உருவாக்கும் வல்லமையைக் கொண்டதாகும்.
பிரித்தானிய கேம்பிரிட்ஜ் மற்றும் சுவிட்ஸர்லாந்தின் சூரிச் பிராந்தியங்களைச் பொறியியலாளர்களால் இந்த ரோபோ முறைமை உருவாக்கப்பட்டுள்ளது.
ரோபோவொன்று தன்னை விடவும் முன்னேற்றகரமான ரோபோக்களை சுயமாக உருவாக்கும் இந்தத் தொழில்நுட்பத்தால் இயந்திரங்கள் மனிதர்களை விஞ்சும் நிலை ஏற்படும் என தற்போது அஞ்ச வேண்டியதில்லை எனவும் தம்மால் உருவாக்கப்பட்டுள்ள 'தாய்' ரோபோவான ரோபோ கரத்தைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் மற்றும் சிறிய மோட்டார் இயந்திரத்தைக் கொண்ட ஆரம்ப கட்ட 'குழந்தை' ரோபோவொன்றையே உருவாக்கியுள்ளதாகவும் அந்தப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்போது தாய் ரோபோ, குழந்தை ரோபோவின் இயக்கங்களை சுயமாக மதிப்பீடு செய்து அதனை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
தன்னை விடவும் மேம்படுத்தப்பட்ட ரோபோக்களை சுயமாக உருவாக்கும் ரோபோ முறைமை உருவாக்கம்...
Reviewed by Author
on
August 14, 2015
Rating:

No comments:
Post a Comment