அண்மைய செய்திகள்

recent
-

காணாமல் போனவர்களை வைத்துக்கொண்டு யாரும் அரசியல் செய்ய வேண்டாம்-உதயச்சந்திரா.


காணாமல் போன உறவுகளை வைத்துக்கொண்டு யாரும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வடமாகாண காணமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தோடும் குடும்பங்களின் சங்க மன்னார் மாவட்ட தலைவி உதய சந்திரா தெரிவித்தார்.

மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று (5) புதன் கிழமை காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

காணாமல் போன எமது உறவுகளை கண்டு பிடிக்க இது வரை யாருமே எங்களுக்கு உதவியாக வரவில்லை.

மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் ஊடாக நாங்கள் காணாமல் போன உறவுகளை தோடி தற்போது இருதிக்கட்டத்திற்கு வந்துள்ளோம்.

தற்போது காணாமல் போனவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை  வரை கொண்டு வந்துள்ளோம்.எனங்களுக்கு இனி தமிழ் தேசியக்கூட்டமைப்பு உதவி செய்ய வேண்டும்.

இந்த தேர்தல் காலங்களில் எங்களுக்கு உதவி செய்வதாக சில அமைப்புக்கள் கூறிக்கொண்டு எமக்கு விளையாட்டு காட்டி வருகின்றனர்.காணாமல் போன எமது உறவுகளை வைத்துக்கொண்டு எங்களை அங்கே வா,இங்கே வா என அலைய விடுகின்றனர்.

அப்படி இனி யாரும் எங்களை அழைக்க வேண்டாம்.நாங்கள் எமது பிள்ளைகளையும்,உறவினர்களையும் இழந்த நிலையில் அவர்களை மீட்க போராடிக்கொண்டிருக்கின்றோம்.

குறிப்பாக பல இடங்களில் இரகசிய தடுப்பு முகாம்கள் உள்ளதாகவும்,அங்கே காணாமல் போனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை காட்டுவதாகவும் கூறுகின்றனர்.

ஆனால் எங்களை தொடர்ச்சியாக ஏமாற்றுகின்றனர்.அப்படியானவர்கள் இனி எங்களையும்,எமது மக்களையும் ஏமாற்ற வேண்டாம்.

எனவே காணாமல் போனவர்களுடைய உறவினர்களே  இனி யாரும் உங்களை அழைத்தால் நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம்.காணாமல் போனவர்களுடைய அனைத்து விபரங்களும் முழுமையாக மன்னார் பிரஜைகள் குழுவில் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

உரிய இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.எந்த அமைப்பிற்கும் காணாமல் போனவர்களுடைய விபரங்கள் தேவையாக இருந்தால் உரிய காரணத்தை கூறி மன்னார் பிரஜைகள் குழுவில் பெற்றுக்கொள்ளுங்கள் அதனை விடுத்து தமது சுய தேவைக்காக காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பதாக கோரி காணாமல் போனவர்களின் உறவினர்களை மேலும்,மேலும் துன்பத்திற்குள் இழுத்துச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை,முன்னாள் உப தலைவர் அந்தோனி சகாயம்,செயலாளர் அந்தோனி மார்க், மன்னார் பிரஜைகள் குழுவின் அபிவிருத்தித்திட்ட இணைப்பாளர் மட்டின் டயேஸ், வடமாகாண காணமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தோடும் குடும்பங்களின் சங்க கிளிநொச்சி,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம் தலைவிகள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
காணாமல் போனவர்களை வைத்துக்கொண்டு யாரும் அரசியல் செய்ய வேண்டாம்-உதயச்சந்திரா. Reviewed by NEWMANNAR on August 05, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.