மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் தருனமாக இச்சந்தர்ப்பம் அமைந்துள்ளது-செல்வம் அடைக்கலநாதன். N
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வெற்றிக்காக பாடுபட்டு எங்களை பாராளுமன்றத்திற்கு மீண்டும் அனுப்பி வைத்துள்ள வன்னி மாவட்;ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் தருனம் இச்சந்தர்ப்பம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு தொடர்ச்சியாக வாக்களித்து பலரை பாராளுமன்றம் அனுப்பிய வன்னி மாவட்ட தமிழ் பேசும் மக்கள் மீண்டும் எம்மை பாராளுமன்றம் அனுப்பி வைத்துள்ளனர்.
-எங்களின் வெற்றிக்காக பாடுபட்ட வன்னி மாவட்ட தமிழ் பேசும் மக்களுக்கு எனது உலம் கனிந்த நன்றிகள்.தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் தருனமாக இச்சந்தர்ப்பம் அமைந்துள்ளது.
கடந்த காலங்களில் எமது மக்கள் அனுபவித்த அனைத்து துயரங்களுக்கும் விடைகொடுக்க முற்படுவோம்.மஹிந்த அரசாங்கம் மைத்திரி அரசாக மாற்றம் பெற்றுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உடனடியாக வழியுருத்தவுள்ளோம்.காணி அபகரிப்பு,வீட்டுத்திட்டங்களில் உள்ள முறைகேடுகள்,வேளைவாய்ப்புக்களில் தகுதியுள்ள எமது இளைஞர் யுவதிகள் நிறாகரிக்கின்ற சந்தர்ப்பங்கள் போன்ற சகல பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்று எமது மக்களின் சுபீட்சமான எதிர்காலத்தை மாற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பு குரல் கொடுக்கும்.குறிப்பாக காணாமல் போனவர்களின் நிலை குறித்தும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அதிக அக்கரை செலுத்தும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் தருனமாக இச்சந்தர்ப்பம் அமைந்துள்ளது-செல்வம்
அடைக்கலநாதன். N
Reviewed by Admin
on
August 21, 2015
Rating:

No comments:
Post a Comment