மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் விடுதியில் பலவந்தமாக தங்கியிருந்தவர்கள் பொலிஸாரினால் வெளியேற்றம்-n
மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் விடுதியில் பலவந்தமாக தங்கியிருந்தவர்கள் இன்று வெள்ளிக்கிழமை(21) காலை பொலிஸாரின் உதவியுடன் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
-இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,,,,
-மன்னார் நகர சபை பிதான வீதியில் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் விடுதி அமைந்துள்ளது.குறித்த விடுதியில் கடந்த 33 வருடங்களுக்கு முன் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் கடமையாற்றிய ஒருவர் தனது மனைவியுன் வாழ்ந்து வந்துள்ளார்.
-இந்த நிலையில் கந்த 8 வருடங்களுக்கு முன்னர் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் கடமையாற்றிய குறித்த நபர் இறந்து விட்டார்.
-தனது கணவர் இறப்பதற்கு முன் கடந்த 25 வருடங்களாக குறித்த பெண் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் விடுதியில் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் கடமையாற்றிய குறித்த நபர் உயிரிழந்த நிலையில் ஏனையவர்களை அங்கிருந்து வெளியேற மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபை கோரிக்கை விடுத்திருந்தனர்.
-எனினும் கடந்த 8 வருடங்களாக அவர்கள் குறித்த விடுதியிலே வாழ்ந்து வந்துள்ளனர்.இந்த நிலையில் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கள் செய்து அவர்களை வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி குறித்த வழக்கு விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த விடுதியில் தங்கியிருந்தவர்களை வெளியேற நீதிமன்றத்தினால் 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது.
-இந்த நிலையில் மீண்டும் குறித்த வழக்கு விசாரனை இடம் பெற்ற போது அவர்கள் குறித்த விடுதியை விட்டு வெளியேறவில்லை.
இந்த நிலையில் தொடர்ச்சியாக அவகாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக இன்று(21) வெள்ளிக்கிழமை காலை மன்னார் பொலிஸாரின் உதவியுடன் குறித்த விடுதியில் உள்ள பொருட்கள் வெளியில் கொண்டுவரப்பட்டு அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் விடுதியில் பலவந்தமாக தங்கியிருந்தவர்கள்
பொலிஸாரினால் வெளியேற்றம்-n
Reviewed by Admin
on
August 21, 2015
Rating:

No comments:
Post a Comment