அண்மைய செய்திகள்

recent
-

குருவில்வான் இசைமாள மோட்டை கிராமத்தின் பெயரை மாற்றி 'யோதவாவி சரணாலயம்'என பெயரிட்ட வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம்-அச்சத்தில் கிராம மக்கள். Photos

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவிற்குற்பட்ட குருவில்வான் இசைமாள மோட்டை கிராமத்தில் 1972 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை வாழ்ந்து வரும் மக்களின் காணிகளை அபகரிக்க வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக பாதீக்கப்பட்ட மக்கள் மன்னார் பிரஜைகள் குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவ்விடையம் தொடர்பாக அக்கிராமத்தில் வாழ்ந்து வரும் மக்கள் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் மாவட்டத்தில் பல காணிகளை வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுவீகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் காணி அபகரிப்பின் ஒரு அங்கமாக பல வருடங்களாக நாம் வசித்து வரும் குருவில்வான் இசைமாளமோட்டை கிராமத்தில் உள்ள எமது காணிகளை அபகரிக்க குறித்த அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

தற்போது எங்களுக்கு எதிராக வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து எங்களை குருவில்வான் இசைமாள மோட்டை கிராமத்தில் இருந்து முற்றாக வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது மன்னார் நீதிமன்றத்தில் விசாரனைகள் இடம் பெற்று வரும் நிலையில் எமது கிராமத்திற்குள்  நுழையும் வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் எங்களை அச்சுரூத்துகின்றனர்.

வீடுகளுக்குள் வந்து சமைத்து வைத்துள்ள உணவுகளை திறந்து பார்க்கின்றனர்.

புதன் கிழமை மாலை எமது கிராமத்திற்குள் வந்த  வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் திடீர் என பெயர் பலகைகளை நாட்டியுள்ளனர்.

குறித்த பெயர் பலகைகளில் 'யோதவாவி சரணாலயம்' வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் என பெயரிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரனைகள் இடம் பெற்று வரும் நிலையில் எவ்வித தீர்ப்பும் வழங்கப்படாத நிலையில் இவர்கள் தன்னிச்சையாக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது இங்குள்ள 22 குடும்பங்களையும் வெளியேற்றும் முகமாகவே  வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் செயற்பட்டு வருவதாக அக்கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த குருவில் வான் இசைமாள மோட்டை கிராமமானது மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாலபெருமாள்கட்டு கிராம சேவகர் பிரிவில்; கட்டுக்கரை குளத்தின் பின்புரத்தை அண்டியதாக சகல வளத்தையும்  கொண்ட கிராமமாக காணப்படுகின்றது.

1972ம் ஆண்டு குறித்த பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் வாழ்து வந்துள்ளனர்.

இங்குள்ள மக்கள் தோட்டச் செய்கையில் ஈடுபட்டு வந்ததோடு பலா மரம்,மாமரம்,உள்ளிட்ட பழ மரங்களினால் கிடைக்கும் வருமானத்தை வைத்து தமது இயல்பு வாழ்க்கையை நடாத்தி வந்தனர்.அது மட்டுமின்றி கட்டுக்கரை குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுவதுடன் மீன்களை பதப்படுத்தி(வத்தல் போடுதல்)விற்பனை செய்து வந்தனர்.

நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையினை அடுத்து வடக்கில் உள்ள மக்கள் இடம் பெயர்ந்து சென்ற போது குறித்த கிராமத்தில் உள்ள மக்கள் இந்தியா மற்றும் இலங்கையின் பல பாகங்களிலும் இடம் பெயர்ந்து சென்றனர்.

பின் நாட்டில் ஏற்பட்ட சமாதான சூழ்நிலையின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தமது செந்த இடங்களுக்கு மீளச் சென்ற போது அக்கிராம மக்களும் மீளச் சென்றுள்ளனர்.

மீள் குடியேறியுள்ள இக்கிராமத்திற்கும்,கிராம மக்களுக்கும் அரசாங்க உதவியுடன் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இப்பகுதியை சேர்ந்த 7 மீனவ சங்கங்களை சேர்ந்த 120 அங்கத்தவர்களுக்கு 46 நன்னீர் மீன்பிடிக்கான வள்ளங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆராம்ப காலம் போல் தற்போது வரை இக்கிராம மக்கள் தமது இயல்பு வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையிலே குறித்த கிராம மக்களை எதுவித முன் அறிவித்தலுமின்றி உடனே வெளியேறும்படி வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதோடு அக்கிராம மக்களும் கடுமையாக அச்சுருத்தப்பட்டுள்ளனர்.

இக்கிராமத்தைச் சேர்ந்த பலருக்கு எதிராக வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கள் செய்யப்பட்டுள்ளது.

குறித்த கிராம மக்களை எழுப்புவதற்கு ஏற்கனவே இராணுவம் முயற்சி செய்து வந்தது.இதற்கு மக்கள் ஒத்துழைக்கவில்லை.இந்த நிலையில் பொது மக்களுக்குச் சொந்தமான பல இடங்களில் இராணுவத்திற்குச் சொந்தமான இடம் என இராணுவத்தினரால் பெயர் பலகை நாட்டப்பட்டுள்ளது.
 
தற்போதே வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிள் இக்கிராமத்திற்கு வந்து மக்களை எழும்பச் செல்லுவதோடு பல வருடங்கள் பழமை வாய்ந்த பழ மரங்களை வெட்டும் படி அச்சுருத்துவதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலே குறித்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு எதிராக  வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வரும் நிலையில் புதன் கிழமை மாலை குறித்த கிராமத்திற்குள் வந்த  வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் 'யோதவாவி சரணாலயம்' என குறிப்பிடப்பட்டுள்ள பெயர் பலகைகளை நாட்டிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  









குருவில்வான் இசைமாள மோட்டை கிராமத்தின் பெயரை மாற்றி 'யோதவாவி சரணாலயம்'என பெயரிட்ட வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம்-அச்சத்தில் கிராம மக்கள். Photos Reviewed by Admin on August 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.