முதுமையடையும் வேகத்தை கண்டறிய புதிய பரிசோதனை...
ஒருவர் என்ன வேகத்தில் முதுமை அடைந்து வருகிறார் என்பதைக் கண்டறிவதற்கான புதிய பரி சோதனை ஒன்றை லண்டனில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
ரத்தத்திலிருந்தும் மூளையிலிருந்தும், தசை திசுக் களிலிருந்தும் எடுக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமான மரபணுக்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை வைத்து முதுமையடையும் வேகத்தைக் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் அறுபத் தைந்து வயதுக்காரர்களிடம் இருந்து எடுக்கப்படும் மரபணுக்களையும், இளவயதுக்காரர்களிடம் இருந்து எடுக்கப்படும் மரபணுக்களையும் ஒப்பிட்டு, ஆரோக் கியமாக முதுமையடைதலுக்கான சூத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் வகுத்துள்ளனர்.
சிலர் தங்களின் நிஜமான வயதைக் காட்டிலும் பதினைந்து வயது வரை கூடுதலாக முதுமை எய்தியவர்களாக இருக்கின்றனர் என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த பரிசோதனை மூலம் எளிதில் நோய்வாய்ப் படக்கூடியவர்களை அடையாளம் காண முடியும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
முதுமையடையும் வேகத்தை கண்டறிய புதிய பரிசோதனை...
Reviewed by Author
on
September 08, 2015
Rating:

No comments:
Post a Comment