ஒரே சமயத்தில் 51 பேர் வேனொன்றில் தம்மைத் திணித்து உலக சாதனை...
ஒரே சமயத்தில் 51 பேர் வேனொன்றுக்குள் தம்மை திணித்து புதிய உலக சாதனை படைத்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
வொர்செஸ்டர்ஷியரில் மல்வெர்ன் எனும் இடத்தில் இடம்பெற்ற வைபவத்தின் போதே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கின்னஸ் உலக சாதனை பதிவேட்டு அதிகாரிகளின் அங்கீகாரத்தைப் பெறவும் உயிராபத்தான நோய்களால் துன்பப்படும் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்கு உதவியளித்து வரும் மேக் ஏ விஷ் மன்றம் என்ற தொண்டு ஸ்தாபனத்துக்கு நிதி சேகரிக்கவுமே இந்த சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒரே சமயத்தில் 51 பேர் வேனொன்றில் தம்மைத் திணித்து உலக சாதனை...
Reviewed by Author
on
September 08, 2015
Rating:

No comments:
Post a Comment