யாழ். பல்கலைக்கழக மாணவ குழுக்களுக்கிடையில் கைகலப்பு...
யாழ். பல் கலைக்கழக வளாகத்தில் இரு மாணவ குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் நான்கிற்கு மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இச் சம்பவத்தால் பல் கலைக்கழக வளாகம் பெரும் பதற்றமான நிலமைக்கு உள்ளாகியது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
சிரேஷ்ட மாணவர்கள் கனிஷ்ட மாணவர்களை இடுப்புப்பட்டி அணிந்து வரக்கூடாது என்றும் பல்கலைக்கழக வளாகத்தில் நிற்கும் மரங்களின் கீழ் போடப்பட்டுள்ள வாங்குகளில் அமரக்கூடாதென்றும் கட்டளைகளை பிறப்பித்தமையினால் எழுந்த முரண்பாடு கைகலப்பாக மாறியது.
வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் தாக்கும் நிலைமைக்கு சென்றதையடுத்து சம்பவத்தில் நான்கிற்கு மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.
இதையடுத்து பல் கலைக்கழக நிர்வாகம் தலையிட்டதையடுத்து தற்போது அங்கு அமைதியான நிலைமையேற்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ். பல் கலைக்கழக வளாகத்தில் தமிழ்த் தேசிய முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் மக்களின் படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கைக்கு ஆதரவாக கையொப்பம் திரட்டும் நடவடிக்கையும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ். பல்கலைக்கழக மாணவ குழுக்களுக்கிடையில் கைகலப்பு...
Reviewed by Author
on
September 09, 2015
Rating:
No comments:
Post a Comment