அண்மைய செய்திகள்

recent
-

விவசாய நடவடிக்கைகளுக்காக வங்கியில் நகைகளை அடகு வைத்த வன்னி விவசாயிகளின் நகைகள் ஏலத்தில் விடாது தடுத்து நிறுத்தல்.-Photos

விவசாயத்தை மேற்கொள்ளுவதற்காக நகைகளை வங்கிகளில் அடகு வைத்து பணத்தை பெற்றுக்கொண்ட வன்னி மாவட்ட விவசாயிகளின் நகைகள் அரச வங்கி ஒன்றினால் பகிரங்க ஏல விற்பனைக்கு விடப்பட இருந்த நிலையில் குறித்த பகிரங்க ஏலம் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வன்னி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் விவசாயத்தை மேற்கொள்ள பண வசதி அற்ற நிலையில் தமது மனைவி,பிள்ளைகளின் நகைகளை வங்கியில் அடகு வைத்து பணத்தை பெற்று விவசாயத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் திடீர் என ஏற்பட்டிருந்த வரட்சியின் காரணமாக விவசாயிகளின் விவசாய செய்கை அதிகலவில் பாதீப்படைந்திருந்தமையினால் விவசாயிகள் பாரிய நஸ்டத்திற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

இதனால் விவசாயிகள் வங்கிகளில் அடகு வைத்த நகைகளை மீள பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் காணப்பட்டனர்.

இந்த நிலையில் வங்கி நிர்வாகம் குறித்த நகைகளை பகிரங்க ஏல விற்பனையில் விடுவதற்கான அறிவித்தலை விருத்திருந்தது.

வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளின் நடைகள் நேற்று(19) சனி மற்றும் இன்று(20) ஞாயிறு ஆகிய இரு தினங்களில் ஏலத்தில் விடுவதற்hகான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

பாதிக்கப்பட்ட வன்னி மாவட்ட விவசாயிகள் உடனடியாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் மலிக் சமர விக்கிரம சிங்க அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

உடனடியாக அமைச்சர் விவசாயத்திற்காக நகைகளை அடகு வைத்த விவசாயிகளின் நகைகளை ஏலத்தில் விடாது தடுத்து நிறுத்தியுள்ளதோடு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் வேண்டு கோளுக்கு இனங்க விவசாயிகளின் நகைகளை மீளப்பெற ஒரு மாத கால அவசாகம் குறித்த வங்கி நிர்வாகத்திடம் கேட்கப்பட்டது.

அதற்கமைவாக குறித்த நிர்வாகம் விவசாயத்திற்காக நகைகளை அடகு வைத்த விவசாயிகள் நகைகளை மீளப்பெற ஒரு மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.







விவசாய நடவடிக்கைகளுக்காக வங்கியில் நகைகளை அடகு வைத்த வன்னி விவசாயிகளின் நகைகள் ஏலத்தில் விடாது தடுத்து நிறுத்தல்.-Photos Reviewed by NEWMANNAR on September 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.