அண்மைய செய்திகள்

recent
-

விந்தணுவை விற்பனை செய்து ஐ-போன் வாங்கும் இளைஞர்கள்: வெளியான பரபரப்பு தகவல்கள்...


சீனா நாட்டில் ஆணின் விந்தணுவை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பயன்படுத்தி அப்பிள் மொபைல் போன் வாங்க பெரும்பாலான இளைஞர்கள் முயற்சி செய்து வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்பிள் மொபைல் போன் மீதான உச்சக்கட்ட மோகத்தின் விளைவாக கடந்த 2011ம் ஆண்டு 17 வயது வாலிபர் ஒருவர் தனது சிறுநீரகத்தை 2,224 பவுண்ட்களுக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்து அப்பிள் போன் வாங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது, சீனாவில் உள்ள ஷாங்காய், ஹுபேய், ஜியாங்சு உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த இளைஞர்கள் அப்பிள் போனை வாங்க தங்களுடைய விந்தணுவை விற்பனை செய்ய முயன்று வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் செப்டம்பர் 25ம் திகதி IPhone 6S என்ற மொடல் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த மொபல் போனை வாங்குவதற்கு தான் சீன இளைஞர்கள் அபாயகரமான முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதன் உச்சக்கட்டமாக, ஷாங்காயில் உள்ள விந்தணுவை சேமிக்கும் வங்கி ஒன்று ‘இனி சிறுநீரகத்தை விற்பனை செய்ய வேண்டாம். உங்கள் விந்தணுவை எங்களிடம் விற்பனை செய்தால் அப்பிள் போன் வாங்கும் உங்கள் கனவை நாங்கள் பூர்த்தி செய்கிறோம்’ என்ற அதிரடி விளம்பரத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, 17 மில்லி லிட்டர் அளவுள்ள விந்தணுவை விற்பனை செய்யும் நபருக்கு 606 பவுண்ட் வழங்கப்படும்.

விந்தணுவை விற்பனை செய்ய வரும் இளைஞர்கள் அவசியம் பல்கலைகழக கல்வி பெற்று 5.5 அடி உயரத்தில் இருக்க வேண்டும் என அந்த வங்கி தனது விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய ஷாங்காய் விந்தணு சேமிப்பு வங்கியின் செய்தி தொடர்பாளர் ஒருவர், தாங்கள் வெளியிட்டுள்ள விளம்பரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், ஏராளமான இளைஞர்கள் தங்களுடைய விந்தணுவை விற்பனை செய்ய முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சீனாவை சேர்ந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் இதுவரை சுமார் 27 சதவிகித ஆண்கள் தங்களுடைய விந்தணுவை விற்பனை செய்ய முன்வந்துள்ளதாகவும், பல இளைஞர்கள் விந்தணுவை விலைக்கு வாங்கும் வங்கிகளின் முகவரிகளை தெரிந்துக்கொள்ள தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


விந்தணுவை விற்பனை செய்து ஐ-போன் வாங்கும் இளைஞர்கள்: வெளியான பரபரப்பு தகவல்கள்... Reviewed by Author on September 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.