பாரிஸ் நகரில் மதக் கூட்டத்தில் அரை நிர்வாண கோலத்தில் தோன்றி இரு பெண்கள் ஆர்ப்பாட்டம்...
பிரான்ஸின் பாரிஸ் நகரின் மேற்கேயுள்ள பொன்டொயிஸில் இடம்பெற்ற இஸ்லாமிய கூட்டமொன்றின் போது, இரு பெண் ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலாடையின்றி அரை நிர்வாணக் கோலத்தில் மேடை மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெயர் வெளியிடப்படாத மேற்படி 25 வயது மற்றும் 31 வயதுடைய பெண்கள் மதக் கூட்டம் நடைபெற்ற மண்டபத்துக்குள் அத்துமீறிப் பிரவேசித்து அங்கிருந்த மேடையில் கூச்சலிட்டவாறு தாவி ஏறியுள்ளனர்.
தொடர்ந்து அங்கிருந்த நுணுக்குப்பன்னி உபகரணங்களை தமது கைகளில் எடுத்த அவர்கள், தம்மை எதிர்கொண்ட இரு ஆண்களை தமது கை முஷ்டிகளால் தாக்க முயற்சித்துள்ளனர்.
அந்த இருவரும் 'எவரும் என்னை கையளிக்கச்செய்ய முடியாது' என பொருள்படும் வாசகத்தை தமது வெற்று உடலில் கறுப்பு நிற மையால் எழுதியிருந்தனர்.
இந்நிலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரால் அந்தப் பெண்களில் ஒருவர் முதலில் அங்கிருந்து இழுத்துச் செல்லப்பட்டார்.
அதற்கு சில நிமிடங்கள் கழித்து அங்கு வந்த மேலும் பல பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இரண்டாவது பெண்ணை பெரும் போராட்டத்தின் மத்தியில் அங்கிருந்து வெளியேற்றினர். அந்தப் பெண்கள் இருவரும் பெண்கள் உரிமை செயற்பாட்டுக் குழுவொன்றைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.
பாரிஸ் நகரில் மதக் கூட்டத்தில் அரை நிர்வாண கோலத்தில் தோன்றி இரு பெண்கள் ஆர்ப்பாட்டம்...
 
        Reviewed by Author
        on 
        
September 15, 2015
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
September 15, 2015
 
        Rating: 


No comments:
Post a Comment