யாழ் பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் ,யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நியமனம்-Photos
வடமாகாண சுகாதாரத்துறையில் உள்ள பெரும்பாலான தலைமை அதிகாரிகளுக்குரிய பதவிகள் நீண்டகாலமாக வெற்றிடமாகவே காணப்பட்டு வந்த நிலையில் யாழ் பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி திரு கனகராஜா நந்தகுமாரன் அவர்களும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பதவிக்கு வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்திய மூர்த்தி அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார் .
வைத்திய கலாநிதி திரு கனகராஜா நந்தகுமாரன் அவர்கள் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் யாழ் பல்கலைக்கழக மருத்துவப் பட்டதாரியும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ நிர்வாகத்துறை முதுமாணிப் பட்டதாரியுமாவர்.
வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்திய மூர்த்தி அவர்கள் யாழ் பல்கலைக்கழக மருத்துவப் பட்டதாரியும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ நிர்வாகத் துறை முதுமாணிப் பட்டதாரியுமாவர்.
மேற்படி நியமனங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வண்ணம் சுகாதார அமைச்சின் செயலரினால் வழங்கப் பட்டுளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது .
யாழ் பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் ,யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நியமனம்-Photos
Reviewed by NEWMANNAR
on
September 27, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 27, 2015
Rating:


No comments:
Post a Comment