அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் இலவச சித்த மருத்துவ மாநாடும் கண்காட்சியும்...


வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலவச சித்த மருத்துவ மாநாடும் கண்காட்சியும் எதிர்வரும் 24,  25 , 26 ஆம் திகதிகளில் கிளிநொச்சி கல்மடு நகர் மூலிகைக் கிராமத்தில் நடடைபெறவுள்ளது.

‘சித்த மருத்துவத்தின் ஊடாக சுகாதார மேம்பாடு’ என்ற கருப்பொருளில் இடம்பெறும் இந்நிகழ்வில் சித்த மருத்துவ ஆய்வரங்கம், வடமாகாண சுதேச மருந்து உற்பத்திப் பிரிவுகளின் கண்காட்சி கூடங்கள், மாதிரி மூலிகைத் தோட்டத்தின் அறிமுகம், தனியார் சுதேசிய மருத்துவ உற்பத்திகளின் காட்சிக் கூடங்கள் இடம்பெறவுள்ளன.

மேலும், ஏனைய மாகாணங்களின் சுதேச மருத்துவக் கண்காட்சிக் கூடங்கள், தனியார் சுதேச மருத்துவ உற்பத்திகளின் காட்சிக்கூடங்கள், ஆயர்வேத பாதுகாப்புச் சபைகளின் இயற்கை மருத்துவ கூடங்கள், பஞ்சகர்மம், வாதரோகம், முறிவு நெறி, அக்குபஞ்சர், யோகாசனம், சோதிடம் போன்ற பாரம்பரிய சிறப்பு வைத்தியங்களும் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வில் சித்த மருத்துவ பாரம்பரிய விழுமியங்களைப் பேணி பாதுகாக்கும் அனைவரும் பங்கு பற்றி பயன்பெறுமாறு வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் டாக்டர் திருமதி சி.துரைரட்ணம் அழைப்பு விடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் இலவச சித்த மருத்துவ மாநாடும் கண்காட்சியும்... Reviewed by Author on September 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.