போப் பிரான்சிஸ் - பிடல் காஸ்ட்ரோ சந்திப்பு...
அமெரிக்கா மற்றும் கியூபா ஆகிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள பாப்பரசர் பிரான்சிஸ், கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோவை சந்தித்தார்.
கியூபாவின் தலைநகர் ஹவானாவில் இடம்பெற்ற குறித்த சந்திப்பு, சுமார் 40 நிமிடங்களுக்கு நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
உடல் நலன் குறைவான நிலையில் இருந்த 89 வயதான காஸ்ட்ரோவின் உடல் நிலை குறித்து விசாரித்தாக தெரிவிக்கப்படுவதோடு, மனித உரிமை மீறல், உலக பொருளாதாரச் சூழல் உள்ளிட்டவை குறித்தும் கலந்துரையாடியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தனது 09 நாள் பயணத்தை நேற்று முன்தினம் (19) ஆரம்பித்த அவர், இரண்டாவது நாளான நேற்று (20) பிடல் காஸ்ட்ரோவை சந்தித்தார்.
அவர் நாளை (22) அமெரிக்கா செல்லவுள்ளதோடு, 27 ஆம் திகதி தனது இருநாட்டு பயணத்தை முடித்துக் கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாப்பரசரின் விஜயத்தை முன்னிட்டு 3,522 பேர் விடுதலை
அமெரிக்கா, கியூபாவுக்கு பாப்பரசர் முதல்முறை விஜயம்.
போப் பிரான்சிஸ் - பிடல் காஸ்ட்ரோ சந்திப்பு...
Reviewed by Author
on
September 21, 2015
Rating:
Reviewed by Author
on
September 21, 2015
Rating:


No comments:
Post a Comment