அண்மைய செய்திகள்

recent
-

யாழில் கடற்கரையினை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு...


யாழ்ப்பாணத்தில் இன்று காலையில் தேசிய கடல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் கடற்கரையோராங்களை பாதுகாத்தல் சம்பந்தமான விழிப்புனர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் யாழ்ப்பாணம் கோட்டைக்கு முன்புறமாக இந்த விழிப்புனர்வு நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன், கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி ஸ்ரீ நிஹால், வட மாகாண சபையின் எதிர்க் கட்சித்தலைவர் சி.தவராசா உறுப்பினர் பா.கஜதீபன், வட மாகாண ஆளுனரின் செயலாளர் எல.இளங்கோவன் மற்றும் யாழ். மாவட்ட திணைக்களங்களின் தலைவர்கள், யாழ். மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், இராணுவ பொலிஸ் கடற்படைகளின் அதிகாரிகள், சர்வ மதத் தலைவர்கள் உட்பட பொது மக்களும் கலந்து கொண்டார்கள்.

யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டைப் பகுதியைச் சுற்றிக் காணப்படும் கடற்கரைப் பகுதிகளில் தேவையற்ற முறையில் கடலிலும் கரையிலும் வீசப்பட்டு இருந்த பொருட்கள் அகற்றப்பட்டதுடன் தொடர்ந்தும் இந் நடவடிக்கையை முன்னெடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழில் கடற்கரையினை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு... Reviewed by Author on September 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.