பெருநாள் தினத்திற்கு அடுத்த நாளும் விடுமுறை...
ஹஜ்ஜுப் பெருநாள் தினமான எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதிக்கு அடுத்த நாளான செப்டெம்பர் 25 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கை பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பாடசாலை நாளுக்கு பதிலாக எதிர்வரும் ஒக்டோபர் 03 ஆம் திகதி, சனிக்கிழமை பதில் பாடசாலை நடைபெறும் என அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹஜ்ஜுப் பெருநாள் தினத்திற்கு (24) அடுத்த நாளான வெள்ளிக்கிழமையை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு ஆகிய பாடசாலை விடுமுறை நாட்கள் வருவதனால், தூர இடங்களுக்கு செல்லும் மாணவர்கள் நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதி உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெருநாள் தினத்திற்கு அடுத்த நாளும் விடுமுறை...
Reviewed by Author
on
September 21, 2015
Rating:
Reviewed by Author
on
September 21, 2015
Rating:


No comments:
Post a Comment