அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தனியார் பேரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பியது – வடக்கு போக்குவரத்து அமைச்சருடனான விசேட சந்திப்பின் பின்னர்….


மன்னாரில் இரண்டாவது நாளாகவும் இன்று வெள்ளிக்கிழமை 25-09-2015 மன்னார் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்த வேளை நண்பகல் 12:30 மணியளவில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு மன்னாரில் அமைந்துள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் விசேட ஒன்றுகூடல் இடம்பெற்றது.

இவ் விசேட ஒன்றுகூடலில் கலந்துரையாடியதன் பிரகாரம் இன்று நண்பகலுடன் பணிப்பகிஸ்கரிப்பை நிறைவு செய்து தமது சேவையை வழங்குவதாகவும், எதிர்வரும் திங்கள் மன்னார் மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அங்கத்தவர்கள் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிநிதிகள் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் வடக்கு போக்குவரத்து அமைச்சர் ஆகியோரோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒன்றுகூடலில் பிரச்சினைகளுக்கு தீர்வு எடுக்கப்படும் எனவும் அறிய முடிகின்றது.

இவ் விசேட ஒன்றுகூடலில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும் மன்னார் பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி திரு.அஜந்த ரொட்ரிக்கோ அவர்களும் மன்னார் நகர சபையின் செயலாளர் திரு.பிரிடோ லம்பேட் அவர்களும் மன்னார் வீதி போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி திரு.சுமண சேகர அவர்களும் மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திரு.கொடியன் அவர்களும் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள், பேரூந்து உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மன்னார் தனியார் பேரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பியது – வடக்கு போக்குவரத்து அமைச்சருடனான விசேட சந்திப்பின் பின்னர்…. Reviewed by Author on September 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.