பிரிட்டனின் நீண்டகால அரசியாக இரண்டாவது எலிசபெத் சாதனை...
பிரிட்டனின் தற்போதைய மகாராணியான இரண்டாம் எலிசபெத் பிரிட்டனின் அரச தலைவராக நீண்ட காலம் இருந்தவர் என்ற சாதனையை நேற்று படைத்தார். இது வரை அவரது பாட்டியாரான விக்டோரியா மகாராணி யாரே பிரிட்டனை நீண்ட காலம் ஆட்சி செய்த அரசியாக இருந்தார்.
பிரிட்டிஷ் நேரப்படி நேற்று மாலை ஐந்து முப்பது மணியளவில் தற்போதைய மகாராணியார், 63 வருடங்கள், எழு மாதங்கள் ஆட்சிசெய்து முடித்திருந்தார்.
அதாவது, 23,226 நாட்களும் 16 மணி நேரமும் 30 நிமிடங்களும் அவர் ஆட்சி செய்திருந்தார். மகாராணியாரின் தந்தையான 6ஆம் ஜோர்ஜ் மன்னர் 1952ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆறாம் திகதி அதிகாலையில் உயிரிழந்தார். அவர் இறந்த நேரம் சரியாகத் தெரியவில்லை என்பதால், எந்த நேரத்தில் மகாராணி யார் இந்த சாதனையைப் படைக்கிறார் என்பது தெரியவில்லை.
மகாராணியாரின் இந்த சாதனையை ஒட்டி, லண்டனில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 40 கோடி மக்களைக் கொண்ட சாம்ராஜ் யத் திற்கு விக்டோரியா மகாராணியார் அரசியாக இருந்தார். 89 வயதாகும் எலிச பெத் 13.8 கோடி மக்களைக் கொண்ட அரசின் தலைவியாக இருக்கிறார்.
பிரிட்டனின் நீண்டகால அரசியாக இரண்டாவது எலிசபெத் சாதனை...
Reviewed by Author
on
September 10, 2015
Rating:

No comments:
Post a Comment