ஜப்பானில் வெள்ளம்; ஆயிரக்கணக்கானோர் பெயர்வு...
கினுகவா (Kinugawa) ஆறு உடைப்பெடுத்துள்ளது; இதனால் வெள்ளத்தில் வீடுகள் மூழ்கியுள்ளன...
ஜப்பானின் ஒசாகா பகுதியிலுள்ள இபாரகி (Ibaraki) பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் காரணமாக ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஜப்பானின் NHK செய்தி நிறுவனம் இது குறித்து தெரிவிக்கையில் இது வரை வெள்ளம் காரணமாக 90,000 பேர் தங்களது இருப்பிடங்களை இழந்து அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இபாரகி பிரதேசத்திலுள்ள வீதியொன்றில் மீட்புப் பணியாளர்கள்...
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணியில் ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளத்தின் காரணமாக ஜப்பானின் கினுகவா நதி உடைப்பெடுத்ததை அடுத்து, ஜப்பானின் தலைநகரான டோக்கியோவிற்கு வடக்கில் அமைந்துள்ள ஜோஸோ (Joso) நகரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.
இது வரை வெள்ளத்தினால் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பானில் வெள்ளம்; ஆயிரக்கணக்கானோர் பெயர்வு...
Reviewed by Author
on
September 10, 2015
Rating:

No comments:
Post a Comment