தமிழ் மக்கள் தொடர்பிலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்! அமெரிக்க ஊடகம்...
தமிழ் மக்கள் தொடர்பிலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு, தேசிய அரசாங்கம் தொடர்பான அவர்களின் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அரசின் பிரதி பிம்பமாகவும், அந்நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான ஆவணமாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பொரின் பொலிசி (வெளிநாட்டுக் கொள்கை) சஞ்சிகை இலங்கை தொடர்பில் ஒரு விரிவான கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் வெளியாகும் மிக முக்கிய சஞ்சிகையாக பொரின் பொலிசி என்ற ஊடகம் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது.
குறித்த சஞ்சிகையில் இலங்கை தொடர்பாக வெளிவந்துள்ள கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை விட புதிய அரசாங்கத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. அதன் காரணமாகவே இலங்கை மீதான அமெரிக்காவின் கொள்கையில் சற்றுத் தளர்வு ஏற்பட்டு, மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவான தீர்மானமொன்றை முன்மொழிய அமெரிக்கா முன்வந்துள்ளது.
எனினும் இந்த மாற்றங்களின் பிரதிபலிப்புகள் இலங்கைக்குள் பெரிதாக எதிரொலிக்கவில்லை. நாட்டினுள் வாழும் தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்தின் பின்னும் தொடர்ச்சியாக நம்பிக்கை இழந்த நிலையிலேயே காணப்படுகின்றார்கள்.
தேசிய அரசாங்கம் வெளிநாடுகளின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு முன்னதாக உள்நாட்டில் வாழும் சொந்தக் குடிமக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்பட வேண்டும். அதற்கு ஏதுவான முறையில் தமிழ் மக்கள் தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் குறித்த கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் தொடர்பிலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்! அமெரிக்க ஊடகம்...
Reviewed by Author
on
September 12, 2015
Rating:

No comments:
Post a Comment