கொலைக் களமாக மாறுகிறதா வவுனியா போதனா வைத்தியசாலை?....
வடக்கு மாகாணத்திலே பல வைத்தியசாலைகள் அரசினால் பல்வேறு வசதிகளுடன் நடாத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் மனச்சாட்சிகளுடனும் மனிதாபிமானத்துடனும் மக்களுக்கு சேவையை வழங்குவாற்கான மனிதர்களை இவ் வைத்தியசாலைகள் கொண்டிருக்கவில்லை.
குறிப்பாக வவுனியா மாவட்டத்தின் போதனா வைத்தியசாலையில் இந்த அசாதாரண நிலை மிக அதிகமாக காணப்படுகிறது. கடந்த மூன்று வருட காலமாக விசேட சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவரின் தவறான வைத்திய முறையால் பல நோயாளிகள் இறந்துள்ளனர். அத்துடன் பெண் நோயாளிகளையும் குறித்த மருத்துவர் தவறாக கையாண்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்திரசிகிச்சை கூடத்தில் பெண் நோயாளி ஒருவரை துஷ்பிரயோகதிற்கு உள்ளாக்கியமை அனைவரும் அறிந்திருந்த நிலையிலும் அவர் ஒரு பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர் என்றவகையிலும் அவர் ஒரு சிங்கள அரசியல்வாதியை சார்ந்தவர் என்பதாலும் சுகாதர மேலதிகாரிகள் இவ்விடயத்தை மூடி மறைக்க நடவடிக்கை முனைப்போடு செயற்படுகின்றார்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான அநீதியை தட்டிக்கேட்க எவரும் முன்வராதது கவலைக்குரியவிடயமாகும்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக சுகாத அமைச்சினால் இவ் வைத்தியருக்கு எதிராக விசாரணை கோரப்பட்டாலும் அவை மந்த நிலையிலே காணப்படுகிறது. மேலும் வவுனியா போதன வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வெளிநாட்டில் உள்ளபடியாலும் அவர் இங்கு வந்தால் விசாரணை துரிதப்படுத்தப்படும் என்னும் அச்சத்தில் இவ் வைத்தியர் அவரை இங்கு வரவிடாமல் தடுப்பதற்க்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
எது எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்கவேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். மேலும் மக்களால் கடவுள் போல் பார்க்கப்படும் புனிதமான மருத்துவத்துறையில் இருக்கும் மருத்துவர்கள் இவ்வாறன கீழ்த்தரமான செயலை செய்வது வருந்தத்தக்க விடயமாகும்.
வவுனியா மாவட்டத்துக்கு உரியதான இப் போதனா வைத்தியசாலை தரம் குறையாமல் மக்களுக்கான தனது சேவையை செய்ய இடம் ஏற்படுத்தப்படவேண்டும். சுகாதாரதுறை ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டங்கள் மூலம் போதுமான சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொள்ளும் அதேவேளை அவர்கள் தங்களுக்கான கடமையை ஒழுங்காக செய்கிறார்களா? என்பதையும் மேலதிகாரிகள் கண்டுகொள்ளவேண்டும்.
கைகூப்பி வணங்கக் கூடிய சுகாதார துறைக்கே உரித்தான பண்புகளை கொண்ட பல கௌரவமான சுகாதார ஊழியர்களை கொண்டதாக வவுனியா மாவட்ட போதனா வைத்தியசாலை உள்ள போதிலும் ஒரு சிலர் இன்றைய வைத்தியசாலை செயற்பாடுகளையே அபகீர்த்திக்கு உள்ளாக்கியுள்ளனர் எனவே மக்களுக்கான சேவையை பெற்றுத்தர அனைவரும் பொறுப்புடன் செயற்படவேண்டும்.
கொலைக் களமாக மாறுகிறதா வவுனியா போதனா வைத்தியசாலை?....
Reviewed by Author
on
September 12, 2015
Rating:

No comments:
Post a Comment