பாப்பரசரின் விஜயத்தை முன்னிட்டு 3,522 பேர் விடுதலை
புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்களின் வருகையை முன்னிட்டு கியூபாவின் சிறையிலுள்ள சுமார் 3,522 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இம்மாதம் 19 ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாப்பரசர் கியூபா மற்றும் அமெரிக்க பகுதிகளுக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செப்டெம்பர் 19 முதல் 22 வரையான காலப்பகுதியில் கியூபாவிற்கும் 22 முதல் 27 ஆம் திகதி வரை அமெரிக்காவிற்கும் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என வத்திக்கான் அறிவித்துள்ளது.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி பிடல் கெஸ்ட்ரோவை, அவரது உடல்நிலை ஒத்துழைக்குமாயின் சந்திக்கவுள்ளதாகவும் வத்திக்கான் தெரிவித்துள்ளது.
பாப்பரசரின் விஜயத்தை முன்னிட்டு 3,522 பேர் விடுதலை
Reviewed by Author
on
September 11, 2015
Rating:

No comments:
Post a Comment