மகன் சொன்ன வார்த்தையால் எனது இதயமே உடைந்துவிட்டது: ‘அப்பா’ பெக்காம் உருக்கம்...
மகன் புரூக்ளின் கூறிய வார்த்தைகளை கேட்டு தான் உடைந்து போனதாக முன்னாள் இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம் உருக்கமாக கூறியுள்ளார்.
இங்கிலாந்து கால்பந்து அணியில் கலக்கியவர் முன்னாள் வீரர் டேவிட் பெக்காம் (40). இவரது மகன் புரூக்ளின் (16) இவரைப் போலவே கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவர்.
இதனால் ஆர்சனல் அணியில் (18 வயதுக்குட்பட்டோர்) இடம் கிடைத்து விளையாடி வந்தார். இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இது அவருக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இதனால் விரக்தி அடைந்த புரூக்ளின் தனது அப்பா பெக்காமிடம் இது தொடர்பாக தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
இது பற்றி பெக்காம் கூறுகையில், 'நான் ஒவ்வொரு முறை களத்தில் இறங்கும் போதும், என்னை ‘பெக்காம் மகன்’ என ரசிகர்கள் அழைக்கின்றனர்.
இதற்கு ஏற்றார் போல் என்னால் சிறப்பாக விளையாடவும் முடியவில்லை. இனி கால்பந்து அதிக நாட்கள் விளையாட முடியாது என்று அவன் பதற்றமாக கூறினான்.'
இதைக் கேட்டதும் எனது இதயம் நொறுங்கி விட்டது. பிறகு நான் உனக்கு மகிழ்ச்சி என்றால் மட்டும் கால்பந்து விளையாடு என்று ஆறுதல் கூறியதாக அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மகன் சொன்ன வார்த்தையால் எனது இதயமே உடைந்துவிட்டது: ‘அப்பா’ பெக்காம் உருக்கம்...
Reviewed by Author
on
September 29, 2015
Rating:
Reviewed by Author
on
September 29, 2015
Rating:


No comments:
Post a Comment