மன்னார் மடு முள்ளிக்குளம் பிரதான வீதி புனரமைக்க நடவடிக்கை....
நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்து மடு முள்ளிக்குளம் தொடக்கம் இரணை இலுப்பைக்குளம் வரையான பிரதான வீதி புனரமைப்பு செய்வதற்கு வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இவ்வீதியானது போக்குவரத்து செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்த மடு முள்ளிக்குளம் முதல் இரணைஇலுப்பைக்குளம் வரையிலான சுமார் 12 கிலோமீட்டர் பிரதான வீதியை புனரமைப்பதற்கு வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் 2.5 மில்லியன் செலவில் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கபடவுள்ளன.
இது தொடர்பான விசேட கூட்டம் வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் நேற்று மடு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மடு பிரதேச செயலாளர் எப்.சி.சத்தியசோதி வீதி அபிவிருத்தி திணைக்கள மன்னார் வவுனியா மாவட்ட பிரதம பொறியியலாளர் எஸ்.ரகுநாதன், மடு பிரதேச செயலக உதவி திட்டமிடல் அதிகாரி ரொகான் குருஸ், கிராம சேவகர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
மன்னார் மடு முள்ளிக்குளம் பிரதான வீதி புனரமைக்க நடவடிக்கை....
Reviewed by Author
on
September 29, 2015
Rating:
Reviewed by Author
on
September 29, 2015
Rating:



No comments:
Post a Comment