அதிபர் ஒபாமாவிற்கு நோபல் பரிசு வழங்கியது மிகப்பெரிய தவறு’: நோபல் கமிட்டி இயக்குனர் பகிரங்க பேச்சு...
அமெரிக்க அதிபரான ஒபாமாவிற்கு 2009ம் ஆண்டுக்குரிய அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியது ஒரு தவறான முடிவு என நோபல் கமிட்டியின் முன்னாள் இயக்குனர் பகிரங்கமாக கருத்து வெளியிட்டுள்ளார்.
நோர்வே நாட்டில் செயல்பட்டு வரும் நோபல் நிறுவனத்தின் இயக்குனராகவும், அமைதிக்கான நோபல் பரிசு கமிட்டியின் செயலாளராகவும் Geir Lundestad என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக பதவி வகித்து வந்துள்ளார்.
இவர் தனது பதவிகளிலிருந்து கடந்தாண்டு ஓய்வுபெற்றுள்ள நிலையில், தற்போது ”Secretary of Peace, 25 years With The Nobel Prize” என்ற ஆங்கில புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.
இந்த புத்தகத்தில், அமைதிக்கான நோபல் பரிசை ஒபாமாவிற்கு வழங்கியது தவறான முடிவு என்றும் அதற்காக தான் மிகவும் வருந்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கு ஒபாமாவின் பெயரை அறிவித்தபோது, அதனை அறிந்து அவரே வியப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஒபாமாவின் ஆதரவாளர்கள் கூட, இந்த நோபல் பரிசை பெற ஒபாமாவிற்கு உண்மையிலேயே தகுதி இருக்கிறதா என கேள்விகள் எழுப்பியுள்ளனர்.
நோபல் கமிட்டியின் செயலாளராக இருந்தபோது எடுத்த இந்த முடிவுக்கு 50 சதவிகிதத்தினரே சரியான முடிவு என ஆதரித்தனர்.
நோபல் பரிசை வழங்குவதால் ஒபாமா திறம்பட செயல்படுவார் என்ற நோக்கத்திலேயே அந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், ஆனால் பரிசை பெற்று இந்த 6 ஆண்டுகளில் ஒபாமா உலக அமைதிக்கான செயல்களில் ஈடுப்படவில்லை என அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோபல் பரிசு உருவாக்கப்பட்டதன் நோக்கம் ஒபாமாவிற்கு பரிசு வழங்கியதன் மூலம் அது நிறைவேறாமல் போய்விட்டது என Geir Lundestad தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஒபாமாவிற்கு அமைதிகான நோபல் பரிசு வழங்கி 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒபாமாவிற்கு பரிசு வழங்கியதற்கு எதிராக விமர்சனங்களை வைத்துள்ள இந்த புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிபர் ஒபாமாவிற்கு நோபல் பரிசு வழங்கியது மிகப்பெரிய தவறு’: நோபல் கமிட்டி இயக்குனர் பகிரங்க பேச்சு...
Reviewed by Author
on
September 18, 2015
Rating:
Reviewed by Author
on
September 18, 2015
Rating:


No comments:
Post a Comment