மன்னார் மாவட்டத்தில் உள்ள கிராம மட்ட அமைப்புக்களுடன் திட்ட மீளாய்வு ஒன்றுகூடல்.-Photos
வடக்கு மாகாண சபையின் கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராம, மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு மின்னிணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புக்கள் பெறுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகளுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் மன்னாரில் இன்று (18) வெள்ளிக்கிழமை காலை 9:00 மணியளவில் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த திட்ட மீளாய்வு கூட்டத்திற்கு சுமார் 16 சங்கங்களை சார்ந்த நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது ஒதுக்கப்பட்ட நிதிகளுக்கான வேலைத்திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுமாறு அமைச்சர் பணித்ததோடு, சங்கங்களுக்கு உள்ள தேவைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள கிராம மட்ட அமைப்புக்களுடன் திட்ட மீளாய்வு ஒன்றுகூடல்.-Photos
Reviewed by NEWMANNAR
on
September 19, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 19, 2015
Rating:




No comments:
Post a Comment