அண்மைய செய்திகள்

recent
-

சர்­வ­தேச விசா­ர­ணையே தேவை : 170 கத்தோலிக்க மதகுருமார் கடிதம்...


சர்­வ­தேச விசா­ரணை மட்­டுமே, இலங்­கை யில் போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நியா­யத்தைப் பெற்­றுத்­தரும் என வடக்கு, -கிழக்குப் பகு­தியைச் சேர்ந்த 170 கத்­தோ­லிக்க மத­கு­ரு­மார்கள் தெரி­வித்­துள்­ளனர்.

இது தொடர்பில் அவர்கள் கூட்­டாக ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­ய­ருக்கு அவ­சரக் கடிதம் ஒன்றை எழு­தி­யுள்­ளனர்.

இலங்கை மீது சர்­வ­தேச விசா­ரணை தேவை என்று கோரி வந்த அமெ­ரிக்­காவும், இப்­போது தவ­றான வழி­ந­டத்தல் கார­ண­மாக தமது நிலையை மாற்றிக் கொண்­டுள்­ளது என்று கூறும் அவர்­க­ளது அறிக்கை, நாட்டில் இரண்டு தேர்­தல்கள் நடை­பெற்ற பிறகு, புதி­தாக அமைந்­துள்ள தேசிய அரசு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்கும் என ஐ.நா. தவ­றாக நம்­பு­கி­றது எனவும் தெரி­விக்­கி­றது.

ஒற்­றுமை இல்­லாமல் சமா­தானம் ஏற்­ப­டாது, அந்த ஒற்­றுமை ஏற்­பட நீதி வழங்­கப்­பட வேண்டும் என திரு­கோ­ண­மலை மறை­மா­வட்ட ஆயர் நோயல் இம்­மா­னுவேல் தெரி­வித்தார்.
அப்­ப­டி­யான நீதி, சர்­வ­தேச விசா­ரணை ஒன்றின் மூலமே வழங்­கப்­பட முடியும் எனத் தாங்கள் நம்­பு­வ­தா­கவும் அவர் கூறி னார்.
உள்­ளக விசா­ர­ணை­க­ளுக்கு உள்­நாட்­டிலும் எதிர்ப்­புகள் உள்­ளன. உள்­நாட்டு விசா­ரணை முறை­யாக நடை­பெ­றாது என்­பதே தங்­க­ளது எண்­ண­மாக உள்­ளது என்றும் திரு­கோ­ண­மலை மறை­மா­வட்ட ஆயர் கூறு­கிறார்.

சர்­வ­தேச விசா­ரணை நடை­பெ­றும்­போது அது பார­பட்­ச­மற்­ற­தாக இருக்கும் என்றும், அது பொறுப்­புக்­கூறல் மற்றும் நீதி­வ­ழங்­கு­வ­தற்கு உதவும் எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.
சாட்­சி­க­ளுக்கு பாது­காப்­பான சூழல் உரு­வாக்­கப்­ப­டு­வது மிகவும் அவ­சியம் என்றும், அது இல்­லா­விடில் விசா­ரணை உரிய பலனை அளிக்­காது எனவும் திரு­கோ­ண­மலை ஆயர் கூறு­கிறார்.

இலங்­கையில் தவ­றி­ழைத்­த­வர்கள் தண்­ட­னை­யி­லி­ருந்து தப்பும் கலா­சாரம் நில­வு­கி­றது என்றும், முன்னாள் இரா­ணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பீல்டு மார்ஷல் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது எனவும் கத்தோலிக்க ஆயர்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

சர்­வ­தேச விசா­ர­ணையே தேவை : 170 கத்தோலிக்க மதகுருமார் கடிதம்... Reviewed by Author on September 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.