அண்மைய செய்திகள்

recent
-

எமிழ் நகர் பகுதியில் அமைக்கப்படவுள்ள அதி நவீன வசதிகளையும் கொண்ட விளையாட்டு அரங்கின் பணியை ஆரம்பிக்க கோரிக்கை.


மன்னார் எமிழ் நகர் பகுதியில் அமைக்கப்படவிருந்த அதி நவீன வசதிகளையும் கொண்ட விளையாட்டு அரங்கின் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் குறித்த விளையாட்டு அரங்கு அமைக்கும் பணியை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விளையாட்டுத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் எமிழ் நகர் பகுதியில் சகல வசதிகளையும் கொண்ட அதி நவீன முறையில் விளையாட்டு அரங்கு அமைப்பதற்கு இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் அதற்கான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் குறித்த நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது கிடப்பிலே போடப்பட்டுள்ளது.அமைச்சர் ஒருவரின் தலையீடு குறித்த விளையாட்டு அரங்கு வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையாக இருந்தது.

இவ்விடையம் தொடர்பாக அன்றைய தினம் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவரிடம் நானும் முன்னாள் எம்.பி வினோ நோகராதலிங்கமும் சென்று இப்பிரச்சினை குறித்து தெளிவு படுத்தி பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் அதனை மீண்டும் பெற்றுக்கொண்ட நிலையிலே அதன் பணிகள் இது வரை மேற்கொள்ளப்படாத நிலையில் கிடப்பிலே உள்ளது.

குறித்த விளையாட்டு அரங்கு தொடர்பில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வர இருக்கின்றோம்.

எக்காரணத்தை கொண்டும் குறித்த விளையாட்டு மைதானத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம்,நிதி மாற்றக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருப்போம்.

எங்களுக்கு கிடைக்கின்ற வரப்பிரசாரமாக உள்ள இந்த நவீன வசதிகளை கொண்ட விளையாட்டு அரங்கை ஏற்கனவே திட்டமிட்டது போல் மன்னார் எமிழ் நகர் பகுதிலிலே அமைப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

குறித்த மைதானம் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதற்கு எச்சந்தர்ப்பத்திலும் இடம் கொடுக்க மாட்டோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.
எமிழ் நகர் பகுதியில் அமைக்கப்படவுள்ள அதி நவீன வசதிகளையும் கொண்ட விளையாட்டு அரங்கின் பணியை ஆரம்பிக்க கோரிக்கை. Reviewed by NEWMANNAR on September 14, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.