யாழில் சர்வதேச விசாரணையை கோரும் வகையில் கையெழுத்து போராட்டம்...
இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணையினை கோரும் வகையில் யாழ்.நகரில் நாளைய தினம் கவனயீர்ப்பு கையெழுத்து போராட்டத்தை நடத்தவுள்ளதாக சர்வதேச பொறுப்புகூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் யாழ்.நகரில் உள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் மேற்படி அமைப்பினால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பின் போதே மேற்படி அமைப்பின் தலைவர் பேராசிரியர் வி.பி.சிவநாதன் மேற்படி அறிவித்தலை விடுத்துள்ளார்.
குறித்த சந்திப்பில் மேலு ம் அவர் குறிப்பிட்டதாவது, இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பு மற்றும் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச நீதி விசாரணையினை கோருவதற்கான மக்கள் போராட்ட குழு ஒன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் நேற்றய தினம் உருவாக்கப்பட்டிருந்தது.
வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் மீது இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச நீதி விசாரணையினை தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் உள்ளக விசாரணை பொறி முறையினை உருவாக்குவதற்கான சமிக்ஞைகள் அண்மைக்காலமாக காண்பிக்கப்படுவதுடன், அண்மையில் இலங்கை வந்த அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வா லும், உள்ளக விசாரணைக்கான சமிக்ஞையினையே காண்பித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ் மக்களுக்கு உள்ளக விசாரணை ஊடாக தீர்வு கிடைக்கப்போவதில்லை, குற்றத்தை இழைத்தவர்களிடமே நீதியை வழங்கும் பொறுப்பை கொடுக்க முடியாது என்ற குரல் வடகிழக்கு தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் எழ ஆரம்பித்திருக்கின்றது.
இந்த நிலையில் தமிழர்களுக் கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, சர்வதேச நீதி விசாரணையே நடத்தப்பட வேண்டும். என்பதை வலியுறுத்தவும், சர்வதேச நீதி விசாரணையினைக்கோரி வடகிழக்கு தமிழர் தாயகம் முழுவதும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்குமான மக்கள் போராட்ட இயக்கம் ஒன்றை உருவாக்குவதற்கான அங்குரார்ப்பண கூட்டம் நேற்றய தினம் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் கட்சியின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் யாழ்.மாவட்டத்திலுள்ள 30 வரையான பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது மக்கள் போராட்ட இயக்கம் ஒன்று அங்கு ரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதன் தலைவராக பேராசிரியர் வி.பி.சிவநாதன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இணைப்பாளராக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி வடகிழக்கு தமிழர் தாயகம் முழுவதும் சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி மேற்படி குழு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதுடன், முதல் தடவையாக சர்வதேச விசாரணையினைக் கோரி யாழ்.நகரில் மாபெரும் கவனயீர்ப்பு கையெழுத்து போராட்டத்தினை நடத்த தீர்மானித்துள்ளதை மக்கள் போராட்ட இயக்கம் உறுதிப்படுத்தியது.
இதேபோன்று தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான சர்வதேச விசாரணையினைக்கோரி வடகிழக்கு மாகாணங்களில் தமிழர் வாழும் பகுதிகள் அனைத்திலும் குறித்த மக்கள் போராட்ட இயக்கம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதுடன், அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்த இயக்கத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் வடக்கு மற்றம் கிழக்கு மாகாணங்களிலும், இந்த இயக்கத்தின் பணிகளை விஸ்தரிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
யாழில் சர்வதேச விசாரணையை கோரும் வகையில் கையெழுத்து போராட்டம்...
Reviewed by Author
on
September 03, 2015
Rating:

No comments:
Post a Comment