யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க சர்வதேச தீர்ப்பாயம் அவசியம்...
ஐ.நா. ம.உ. ஆணையாளருக்கு ரெலோ, புளொட், ஈ.பி.ஆர். எல். எப். கடிதம்
இறுதிக் கட்ட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளக விசாரணை பொறி முறையோ அல்லது சர்வதேச கண்காணிப் புடனான உள்ளக விசாரணை பொறி முறையோ நீதியை வழங்காது. யுத்தக் குற்றம் தொடர்பில் சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றே அவசியமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. இது தொடர்பில் தமிbழ விடுதலை இயக்கம், தமிbழ மக்கள் விடுதலை கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் கையெழுத்திட்டு, ஐ. நா. மனித உரிமை கள் ஆணையாளருக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளன. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-
இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிbழ விடுதலை இயக்கம், தமிbழ மக்கள் விடுதலை கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய அமைப் புக்களை சேர்ந்த நாங்கள். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிக மோசமான சர்வதேச யுத்தக் குற்றங்களில் இருந்து தமிழ் மக்களை பாதுகாக்க ஐ.நா. சபை தவறிவிட்டமையை மீண்டும் ஒருமுறை சர்வதேச சமூகத்துக்கு நினைவுறுத்த விரும்புகின்றோம்.
ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள். மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைக் குற்றம் என்பவற்றை விசாரிப்பதற்கான சர்வதேச பொறிமுறை ஒன்றினை கண்டறிவதற்கான கருத்தாடல்கள் மற்றும் அதற்கான நியாயாதிக்கங்கள் குறித்து விவாதிப்பதில் கடந்த ஆறு வருடங்கள் உருண்டோடி விட்டன. ஐ.நா. மனித உரிமை ஆணையகம் இலங்கை மீதான, ஐ. நா. உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் விசாரணை தொடர்பாக மூன்று தீர்மானங்களை தொடர்ச்சியாக நிறைவேற்றியுள்ளது. இந்த விசாரணை தொடர்பான அறிக்கை விரைவில் வெளிவரவுள்ளது. இந்நிலையில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேசக் குற்றங்களை விசாரிப்பதற்கான உள்ளக பொறிமுறை ஒன்றை ஏற்படுத்து வதற்காக விவாதங்களும் பேச்சுவாத்தைகளும் இடம்பெற்று வருகின்றன.
இறுதிக்கட்ட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளக விசாரணை பொறி முறையோ அல்லது சர்வதேச கண்காணிப் புடனான உள்ளக விசாரணை பொறிமுறையோ நீதியை வழங்காது என்பதனை நாம் தெளிவாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். மேலும் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச தீர்பாயம் ஒன்றை உடனடியாக உருவாக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றோம்.
இது தொடர்பாக பின்வரும் விடயங்களை தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றோம். இலங்கையின் சரித்திரத்தில் நீதித் துறையானது காலம் காலமாக தமிழ் மக்களை ஒடுக்குவதற்கான செயற்பாடுகளில், சிங்கள அரசியல் தலைமைகளுக்கு கீழ்ப்படிந்ததாகவே செயற்பட்டு வந்திருக்கின்றது.
கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட உள்நாட்டு விசாரணைக் கமிசன்கள் எவ்வித காத்திரமான நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். ஆட்சி மாற்றங்களோ அரசு மாற்றங்களோ பெயரளவுக்கு மாத்திரமே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
குற்றச் செயல்களைப் புரிந்த முக்கிய நபர்கள் தற்போதும் முக்கிய அரசியல் மற்றும் இராஜதந்திர பதவிகளில் அமர்த்தப்பட்டுள் ளனர். பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் தமிழ் மக்கள் எந்த வகையான உள்ளக விசாரணையையும் நிராகரிப்பதுடன் இலங்கையின் நீதித்துறை மீதும் முற்றாக நம்பிக்கை இழந்துள்ளனர். உள்ளக விசாரணை என்பது குற்றவாளிகள், தம்மீதான குற்றங்களை தாமே விசாரிப்பதற்கு ஒப்பானதாகும். உள்ளக விசாரணை நடத்தப்படும் என உறுதிமொழிகள் வழங்கப்பட்ட நிலையில் ஸ்ரீலங்காவின் அரசியலமைப்புச் சட்டமானது யுத்தக் குற்றங்களையோ, மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையோ, தமிழ் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்களையோ விசாரிப்பதற்கான அரசியல் சாசன சரத்துக்களையோ சட்டவரைவாக்கத்தையோ கொண்டிருக்க வில்லை.
என்பதுடன், இக்குற்றங்களை விசாரிப்பதற்கு பின் தேதியிட்ட புதிய சட்டவரைவாக்கத்தை உருவாக்கவும் அனுமதியளிக்காது என்பது நிதர்சனமான உண்மையாகும். ஆகவே யுத்தக் குற்றங்களையோ. மானுடத்திற்கு எதிரான குற்றங்களையோ, பொதுமக்கள் மீதான வகைதொகையற்ற தாக்குதல் குறித்தோ விசாரிக்கப்படுவதற்கான எவ்வித சட்ட அடித்தளங்களும் கிடையாது.
உள்ளக விசாரணைக்கோ அல்லது சர்வதேச கண்காணிப்புடனான உள்ளக பொறிமுறைக்கோ அனுமதியளிப்பதானது, சர்வதேச விசாரணை தொடர்பாக மற்றும் பொறுப்புக்கூறுதல் தொடர்பாக இதுவரை எட்டியுள்ள நல்ல பெறுபேறுகளை வலுவிழக்கச் செய்வதுடன் மீண்டும் ஒருமுறை ஐ. நா. தமிழ் மக்களை நிர்க்கதியாக கைகழுவி விடும் நிலையையே உருவாக்கும். உள்ளக பொறிமுறையானது தற்போது உள்ள ஆதாரங்களை இல்லாமல் செய்வதற்கு வழிவகுப்பதுடன். சாட்சிகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் மீண்டும் ஒருமுறை பாதுகாப்பற்ற ஆபத்தான சூழ்நிலைக்கே தள்ளும்.
ஏனெனில், ஸ்ரீலங்காவில் சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டங்களோ பொறிமுறையோ எதுவும் தற்போது இல்லை. இது ஏற்கனவே பாதிக்கப்பட்ட வர்களை மீண்டுமொருமுறை பாதிப்படையச் செய்வதற்கே வழிவகுக்கும். இலங்கை ஒரு வளர்முக நாடு என்பதன் அடிப்படையில் இத்தகைய குற்றங்களை விசாரிப்பதற் கான பொறிமுறைகளோ, கட்டமைப் புக்களோ அது தொடர்பான நிறுவனங்களோ இலங்கை அரசிடம் இல்லை. இந்நிலையில் உள்ளக விசாரணைக்கான பொறிமுறையானது காலத்தைக் கடத்துகின்ற செயற்பாடாகவே அமையும்.
இலங்கை ஜனாதிபதுயும், பிரதமர் மற்றும் ஏனைய பல அமைச்சர்களும் வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான எந்தவொரு அரசியல் உயர்மட்டத்தினரையோ இராணுவ உயர் மட்டத்தினரையோ தண்டனைக்குள்ளாக்க மாட்டோம் என்று கூறியதன் பின்னர், உள்ளக விசாரணை என்பது எதற்காக என்ற கேள்வியும் எழுகின்றது.
மேலதிகமாக, ஐ.நா. உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை மீதான விசாரணைக்கான ஆணையானது யுத்தக் குற்றங்களுக்கான விசாரணையுடன் மட்டுப்படுத்தப்படாமல் பரந்த அளவில் இனப்படுகொலை குற்றத்தை உள்ளடக்கிய சகல சர்வதேச குற்றங்களையும் விசாரிப்பதற்கும் அனுமதியளிக்கின்றது. எனவே உள்ளக விசாரணையோ அல்லது சர்வதேச பொறிமுறையுடனான விசாரணையோ இலங்கை அரசினால் தமிழ் மக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக எவ்வித விசாரணைகளும் நடைபெறாமலே போய்விடும்.
இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், மேம்படச் செய்வதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும், சர்வதேசக் குற்றங்கள் மீண்டும் இடம்பெறா வண்ணம் கட்டுப்படுத்துவதற்கும் உறுதி கொண்டிருக்கும் உங்களை நாம் பாராட்டும் அதேவேளை, உள்ளக விசாரணை அல்லது சர்வதேச பொறிமுறையுடன் கூடிய உள்ளக விசாரணைக்கு மாறாக இலங்கை தொடர்பான விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரைக் குமாறோ அல்லது பொறுப்புக் கூறலுக்கான ஒரு சர்வதேச பொறிமுறையை உருவாக்கு மாறோ அல்லது யுத்தக் குற்றங்களை விசாரிப்பதற்கான சர்வதேச தீர்ப்பாயத்தை அமைக்குமாறோ அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க சர்வதேச தீர்ப்பாயம் அவசியம்...
Reviewed by Author
on
September 03, 2015
Rating:

No comments:
Post a Comment