மாதம் ஒரு செயற்கை கோளை அனுப்ப திட்டம்: மயில்சாமி அண்ணாதுரை...
மாதம் ஒரு செயற்கை கோளை அனுப்ப திட்டமிட்டு உள்ளதாக இஸ்ரோ செயற்கை கோள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
மைசூரில் நடந்த கல்லூரி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், சந்திரனுக்கு செவ்வாய் கிரகத்துக்கும் செயற்கை கோள் அனுப்புவது என்பது பெரும் சவாலானது.
இஸ்ரோவில் 90,000 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இவர்கள் ஒவ்வொரு செயற்கை கோளையும் அனுப்பும் பணியை பெரும் சவாலாக மேற்கொள்கிறார்கள்.
எந்த நாடும் முதல் முயற்சியிலேயே செயற்கை கோள்களை வெற்றிகரமாக ஏவியது கிடையாது.
ஆனால் நாம் பெரிய வளர்ந்த நாடுகளுக்கு இணையாக சாதனை படைத்து இருக்கிறோம்.
தற்போது ஆண்டுக்கு 5 செயற்கை கோள்களை பெரும் சிரமத்துக்கு இடையே அனுப்பி வருகிறோம்.
இனி மாதம் ஒரு செயற்கை கோளை அனுப்ப திட்டமிட்டு உள்ளோம் என்ரும், இதுவே அப்துல் கலாமுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மாதம் ஒரு செயற்கை கோளை அனுப்ப திட்டம்: மயில்சாமி அண்ணாதுரை...
Reviewed by Author
on
September 20, 2015
Rating:
Reviewed by Author
on
September 20, 2015
Rating:


No comments:
Post a Comment