அண்மைய செய்திகள்

recent
-

ஒரு நளைக்கு நான்கு முறை மட்டுமே அலைகள் ஏற்படும் கடற்கரை....


இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தின் கிழக்கு மூலையில் அமைந்துள்ள பலாசோர் (அ) பலேஸ்வர் என்ற நகரம் அமைந்துள்ளது.
இந்த நகரம் ஒடிஸாவின் தலைநகரான புவனேஸ்வரிலிருந்து வடக்கே 194 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதி கடல் மட்டத்திலிருந்து 16 மீற்றர் உயரமுடையது.

சந்திபூர் கடற்கரை சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களில் இங்கு முக்கியமானது. ஒரு மைல் தூரத்துக்கு அமைந்தது. அனுபவித்துக்கொண்டே இருக்கச் செய்யும் அழகிய கடற்கரை இது.

இந்த கரையில் அலைகள் ஒரு நாளைக்கு 4 தடவை மட்டுமே சமகால இடைவெளியில் வந்து செல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

பலாசோர் மாவட்டம் பிரபலம் அடைந்ததுக்கு சந்திபூர் கடற்கரை முக்கியமானதாக விளங்குகிறது.

பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் இங்கு மிகவும் பிரசித்திபெற்றது. இது பலாசோரிலிருந்து தென்மேற்கே 30 கி.மீ. தூரத்தில் கண்ணுக்கு இனிய இயற்கை அழகு சூழ்ந்த மலைமீது அமைந்துள்ளது.

சுற்றியுள்ள மலையை கடந்துசெல்லும் வசந்தமான கிளைகிளையான இயற்கை வழிகள் அழகில் பிரமிக்கச் செய்யும்.



அங்கு மூலவர் சிவபெருமான், ஆனால், பார்க்க முடியாது. அங்குள்ள சிலையை தொட்டால் குளிர்ந்த நீர்வீழ்ச்சிக்குள் மூழ்கியதுபோல உணர்வை ஏற்படுத்துவது ஒரு புதிரான அனுபவம்.

அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் ’சந்த்ரகடியா’ என்ற ஊர் உள்ளது. அங்கு குன்றின் மீது பிஷேஸ்வர் கோவில் உள்ளது. இந்த ஊர் முற்றிலும் மலையால் சூழப்பட்டுள்ளது தனியழகு.

இதன் அருகில் ’குலியா’ என்ற பழங்குடியின மக்களின் கிராமம் உள்ளது.

பலாசோரிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் தெற்கே கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளின் பாதுகாப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு சோதனை தளம் வங்காள விரிகுடா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது.

மேலும், இங்கு இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு உள்ளது. இதில்தான் அக்னி, நாக், பிரம்மாஸ், பிரித்வி, த்ரிசூல் போன்ற ஏவுகணைகள் உருவாக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது.

1989 லிருந்து ஏவுகணை தளமாக பயன்பட்டு வருகிறது. ஆனால், ஸ்ரீஹரிஹோட்டாவை போல துணைகோள்கள் ஏவுவதற்கு பயன்படுவதில்லை. இதுவும் பயணிகள் பார்க்க வேண்டிய இடமாகும்.

இந்திய அளவில் தலைசிறந்த சுதந்திர போராட்ட தியாகிகளில் ஒருவரான ஜதீந்த்ரநாத் முகர்ஜி (பாகா ஜதீன்) இங்குதான் பிரிட்டிஷரை எதிர்த்து போரிட்டு காயம்பட்டு உயிர்விட்டார்.

அவருடைய நினைவிடமும் சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய முக்கியமானவற்றில் ஒன்று.

கடற்கரையில் சிறப்பு பெற்ற பலாசோரில் பாசனத்துக்கு உரிய வற்றாத இரு நதிகளும் அவை கடலில் கலக்கும் முகத்துவாரங்களும் கண்கவர் இடங்களாக உள்ளன. ஒடிஸாவின் உணவுக் களஞ்சியமாக பலாசோர் திகழ இதுவே காரணம்.

புத்தபலங்கா, சுவர்ணரேகா என்ற இரண்டு ஆறுகள் இங்கு முக்கியமானவை. இவை மேற்கிலிருந்து கிழக்காக பலாசோர் மாவட்டம் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

கிரகோரா கோபிநாத் கோவில்: இது பலாசோரிலிருந்து 7 கி.மீ.தூரத்தில் உள்ளது. இது புகழ்பெற்ற கோனார்க் கோவிலை கட்டிய லிங்குலா நரசிம்ம தேவ் என்ற மன்னரால் கட்டப்பட்டது.

கிருஷ்ண பிரசாத் கிரா கோவில், அஸ்ட துர்கா கோவில், பிரஞ்சிநாராயணன் கோவில், புத்தர் சந்தி ஆகியவை இங்குள்ள மேலும் சில புகழான கோவில்களாகும்.

பலாசோரிலிருந்து தென்கிழக்கே 30 கி.மீ. தூரத்தில் பார்த்து ரசிக்கவேண்டிய ’தம்ரா’ என்ற துறைமுகமும் உள்ளது.

பலாசோர் இயற்கை அழகு மிகுந்த பல இடங்களையும் வரலாற்று நினைவிடங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதால், இங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

பயணிகள் வந்துசெல்ல ஏதுவாக மெரிடியன், ஹரி ப்ளாஸா, பர்ஜோஜிஸ் போஜன் உட்பட சகல வசதிகளுடன் கூடிய பல ஹொட்டல்களும் உள்ளன.


ஒரு நளைக்கு நான்கு முறை மட்டுமே அலைகள் ஏற்படும் கடற்கரை.... Reviewed by Author on September 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.