கத்தோலிக்கர்களின் மறுமணத்தை இலகுபடுத்துகிறார் பாப்பரசர்...
ரோமன் கத்தோலிக் கர்கள், கத்தோலிக்கத் திருச்சபையில் இருந்து கொண்டே விவாகரத்து மற்றும் மறுமணம் செய்து கொள்வதை அனுமதிக் கும் புதிய வழிமுறைகளை பாப்பரசர் பிரான்சிஸ் அறிவிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
'அன்னல்மெண்ட' அல் லது 'தடை நீக்கம்' என்று அறியப்படும் தற்போது இருக்கு வழிமுறையை ஒழுங்குபடுத்துவது எப்படி, அதற்காகும் செலவுகளைக் குறைப்பது எப்படி என் பது குறித்து ஆராய திருச்சபை வழக்குரைஞர்கள் கொண்ட ஒரு ஆணை யத்தை பாப்பரசர்; கடந்த ஆண்டு நியமித்திருந்தார்.
இந்தத் 'தடை நீக்க' வழிமுறை இல்லாமல், விவாகரத்து செய்து மறுமணம் செய்துகொள்ளும் கத்தோலிக்கர்கள் திருமணத்துக்கு வெளியே உறவு கொள் பவர்களாகக் கருதப்பட்டு அவர்களுக்கு தேவ நற்கருணை (கம்யு+னியன்) வழங் கப்படுவதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள்.
விவாகரத்து குறித்த கத்தோலிக்க போதனைகளை பாப்பரசர் பிரான்சிஸ் மாற்றமாட்டார் ஆனால், திருமண உறவு முறிந்த தம்பதியர், தங்கள் திரு மணம் ஆரம்பத்திலிருந்தே செல்லுபடியாகாத நிலையில் இருந்தது என்று நிரூ பிப்பதை எளிதாக்குவார் என்று தெரியவருகிறது.
கத்தோலிக்கர்களின் மறுமணத்தை இலகுபடுத்துகிறார் பாப்பரசர்...
Reviewed by Author
on
September 09, 2015
Rating:

No comments:
Post a Comment