மக்காவில் கிரேன் வீழ்ந்து இது வரை 107 பேர் பலி...
இறந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளதாக சவூதி அரேபிய அரசாங்கம் தெரிவித்துள்ளதோடு, 230 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
அந்நாட்டு நேரப்படி பி.ப. 5.23 மணிக்கு (இலங்கையில் பி.ப. 7.53 மணிக்கு) இச்சம்பவம் இடம்பெற்றதாக சவூதி அரேபியாவின் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் லெப்டினன் சுலைமான் பின் அப்துல்லாஹ் அல் அம்ர் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமையா நேற்று (11) ஜும்ஆவின் பின்னர் பெரும் திரளானோர் அங்கு திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பதிப்பு 03 (12-09-2015/00:09)
இறந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளதாக சவூதி அரேபிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மழையுடன் கூடிய காற்றினால் இவ்விபத்து இடம்பெற காரணமாக அமைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக அரேபிய தீவகம் முழுவதும் புழுதியுடன் கூடிய காற்று வீசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பதிப்பு 02 (11-09-2015/ 23:03)
இறந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளதாக சவூதி அரேபியாவின் சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
பதிப்பு 01 (11-09-2015/22:43)
சவூதி அரேபியாவிலுள்ள புனித கஃபாவிலுள்ள மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலில் கிரேன் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் இது வரை 62 பேர் பலியாகியுள்ளனர்.
முஸ்லிம்களின் புனித தலமான மக்கா நகரில் நடந்த இந்த கோர சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
முஸ்லிம்களின் புனித யாத்திரையான ஹஜ் ஆரம்பமாவதற்கு இன்னும் ஓரிரு வாரங்கள் இருக்கின்ற நிலையில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மக்காவில் கிரேன் வீழ்ந்து இது வரை 107 பேர் பலி...
Reviewed by Author
on
September 12, 2015
Rating:

No comments:
Post a Comment