நிர்க்கதியான 136 பேர் இலங்கை வருகை...
மத்திய கிழக்கு நாடுகளான குவைத் மற்றும் சவூதி அரேபியாவில் பணிப்பெண்களாக வேலைக்குச் சென்று நிர்க்கதியான 136 பேர் இன்று (10) காலை இலங்கை வந்தனர்.
இவர்களில் சவூதியிலிருந்து 40 பேரும் குவைத்திலிருந்து 96 பேரும் இவ்வாறு இலங்கை வந்தடைந்துள்ளனர்.
அத்துடன் மத்திய கிழக்கிற்கு பணிப்பெண்களாக வேலைக்குச் சென்ற பலர் கடந்த சில நாட்களாக இலங்கைக்கு வந்துள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குவைத்திலிருந்து வந்த 96 பேரிற்கும் இலங்கை வருவதற்கான விமான டிக்கட்டினை அந்நாடு இலவசமாக வழங்கியதாக அங்கிருந்து வந்தோர் தெரிவித்தனர்.
இவ்வாறு நிர்க்கதியாக வந்த பணிப்பெண்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கட்டுநாயக்க விமானநிலைய பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டதோடு, அவர்களது சொந்த இடத்திற்கு செல்வதற்கான பயணச் செலவுக்கான பணமும் வழங்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.
நிர்க்கதியான 136 பேர் இலங்கை வருகை...
Reviewed by Author
on
September 10, 2015
Rating:

No comments:
Post a Comment