அண்மைய செய்திகள்

recent
-

மனித உரிமை சட்ட மீறல்களை புறிந்தவர்களுக்கு எதிராக சர்வதேச விசாரனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்-செல்வம் அடைக்கலநாதன்.

மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்ட மீறல்களை புறிந்தவர்களுக்கு எதிராக சர்வதேச விசாரனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்ககையில்,,,,,

தற்போது வடக்கு,கிழக்கிலே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற விடையம் உள்ளக விசாரனையா? அல்லது சர்வதேச விசாரனையா? என.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மீது பல விமர்சனங்கள் முன்வைத்து தவரான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பொறுத்தமட்டில் யாரும் உள்ளக விசாரனைகளை ஆதரிக்கவில்லை.

சர்வதேச விசாரனைகள் ஊடக எங்களுடைய மக்களின் அழிக்கப்பட்ட வாழ்க்கை,எமது மக்களின் மனித உரிமை மீறல்கள் மீது தொடரப்பட்ட அநீதிகள் ஆகியவற்றில் சம்மந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.விசாரனைக்கு உற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் தேசியக்கூட்டமைப்பில் எவ்வித தளர்வையும் ஏற்படுத்தாத வகையிலே அது வலுவான ஒரு விடையமாக இன்று பல சர்வதேச தலைவர்களிடம் நாங்கள் எடுத்துச் சொல்லியிருக்கின்றோம்.

சர்வதேச விசாரனைகளினூடாக நாம் இரு விடையங்களை கையாள முடியும்.

ஒன்று விசாரனை மற்றும் இனப்பிரச்சினை தீர்வு ஆகிய இரண்டையும் கையாளக்கூடிய வசதி வாய்ப்புக்களை சர்வதேச விசாரனைகளினூடாகவே ஏற்படுத்த முடியும் என்பதே எங்களுடைய நம்பிக்கையாக இருக்கின்றது.

அந்த வகையிலே நாங்கள் ஒரு போதும் உள்ளக விசாரனைகளை ஏற்றுக்கொள்ளப் போவது இல்லை.
உள்ளக விசாரனைகள் ஊடாக பல ஆணைக்குழுக்களை கூட்டி ஒரு பிரச்சினை உச்ச கட்டத்தில் இருக்கின்ற போது ஆணைக்குழுக்களை அமைப்பதன் ஊடாக அதனை தளர்த்துவதற்கான தன்மையைத்தான் கடந்த கால வரலாறுகள் கூறுகின்றது .

உள்ளக விசாரனை என்பது சர்வதேச விசாரனையை தளர்த்துவதற்கும்,அதனை வலு இழக்கச் செய்து அதனை கிடப்பிலே போடுவதற்கான வாய்ப்பாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக நாங்கள் இந்த உள்ளக விசாரனைகளை எதிர்க்கின்றோம்.

-எனவே சர்வதேச விசாரனை என்பது நடத்தப்பட்டு ஐ.நா. சபையிலே எதிர்வரும் 30 ஆம் திகதி விசாரனைக்கு வந்து தீர்ப்பு என்பது பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்லுகின்ற வாய்ப்பை தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏற்படுத்தும்.

அதனூடாக தண்டிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஒரு நிலைப்பாடாக இருக்கின்றது.

எதிர்வரும் 30 ஆம் திகதி ஜெனிவாவில் சர்வதேச விசாரனைகள் இடம் பெறவுள்ள காராணத்தினால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு செல்வதற்கு இருக்கின்றோம்.

அந்த வகையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடி எதிர்வரும் 30 ஆம் திகதி ஜெனிவா செல்லும் வாய்ப்பை உருவாக்குவோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.
மனித உரிமை சட்ட மீறல்களை புறிந்தவர்களுக்கு எதிராக சர்வதேச விசாரனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்-செல்வம் அடைக்கலநாதன். Reviewed by NEWMANNAR on September 10, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.