பிரான்ஸில் தீவிரவாதிகள் தாக்க சதியா? ஈபிள் கோபுரத்தை அதிரடியாக மூடிய பொலிசார்...
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை தீவிரவாதிகள் தாக்க திட்டமிட்டுள்ளதாக வந்த ரகசிய தகவலை அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றிவிட்டு கோபுரத்தை மூட பொலிசார் உத்தரவிட்டுள்ளனர்.
ஈபிள் கோபுரத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள பொலிசாருக்கு இன்று காலை 9 மணியளவில் ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் மர்மமான கைப்பையுடன் ஈபிள் கோபுரம் உள்ள பகுதியில் வலம் வருவதாக அந்த தகவலில் கூறப்பட்டிருந்தது.
கோபுரத்தை இன்று காலை 8 மணியளவில் பொதுமக்களின் பார்வைக்கு திறந்த நிலையில், தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்ததால் உடனடியாக அங்கிருந்த மக்களை பொலிசார் வெளியேற்றினர்.
மேலும், சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் நுழைவுச்சீட்டு வழங்கும் அறைகளையும் பொலிசார் மூடினர்.
9 மணியளவில் ஈபிள் கோபுரத்தை மூடிய பொலிசார், சந்தேகத்திற்குரிய நபரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீவிரவாத தாக்குதலை முறியடிக்கும் பொலிசார் ஈபிள் கோபுரத்தை சுற்றி ஹெலிகொப்டரில் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இன்று பிற்பகல் 2 மணி வரை சந்தேகத்திற்குரிய எந்த நபரும் கைது செய்யப்படவில்லை.
எனினும், பொலிசாருக்கு கிடைத்துள்ள தகவல் உண்மையானதா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த சில வருடங்களாக அல்-கொய்தா, ஐ.எஸ் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களால் ஈபிள் கோபுரத்திற்கு அடிக்கடி தாக்குதல் மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸில் தீவிரவாதிகள் தாக்க சதியா? ஈபிள் கோபுரத்தை அதிரடியாக மூடிய பொலிசார்...
Reviewed by Author
on
September 20, 2015
Rating:
Reviewed by Author
on
September 20, 2015
Rating:


No comments:
Post a Comment