8 வருடங்களாக பேசாமல் சமாதி நிலையில் இருந்த 11 வயது சிறுமி....
உத்தரபிரதேசத்தில் கடந்த 8 வருடங்களாக பேசாமல் சமாதி நிலையில் இருந்த 11 வயது சிறுமியை பொலிசார் மீட்டுள்ளனர்.
ஆக்ராவில் கடந்த 8 வருடங்களாக 11 வயது சிறுமி ஒருவர் பேசாமல் சமாதி நிலையில் இருந்துள்ளார்.
இது குறித்து அச்சிறுமியின் தந்தை கூறுகையில், எனது மகளுக்கு 3 வயது இருக்கும் போது ஊரில் வறட்சி ஏற்பட்டது.
அப்போது வயல்வெளியில் அமர்ந்து எனது மகள் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
பின்னர் அவர் கிராமத்தினரை பார்த்து தனக்கு கோவில் எழுப்புமாறு கூறினார். இதையடுத்து உடனே அங்கே மழை பெய்தது.
அதன் பிறகு எனது மகள் பேசவே இல்லை. பின்னர் கிராமத்தினர் எனது மகளுக்காக கோவில் கட்டினர்.
அதில் தான் எனது மகள் அமர்ந்து பிரார்த்தனை நடத்தி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அச்சிறுமி தனது பெற்றோர்களுக்கு ஒரு காகிதத்தில், தான் சமாதி ஆக போவதாகவும் பால் மற்றும் புனித நீரால் தன்னை குளிப்பாட்டுமாறும் கேட்டுள்ளார்.
இதையறிந்த மக்கள் பால் மற்றும் புனித நீருடன் வரத்தொடங்கியுள்ளனர்.
பின்னர் இந்த தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று உடனடியாக சிறுமியை மீட்டுள்ளனர்.
8 வருடங்களாக பேசாமல் சமாதி நிலையில் இருந்த 11 வயது சிறுமி....
Reviewed by Author
on
September 29, 2015
Rating:
Reviewed by Author
on
September 29, 2015
Rating:


No comments:
Post a Comment