ஒசாமா பின்லேடன் இன்னும் சாகவில்லையாம் : பரபரப்பு தகவல்...
சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் இன்னும் சாகவில்லை. அவர் அமெரிக்க உளவுத்துறையின் பாதுகாப்பில் சொகுசாக வாழ்ந்து வருகிறார் என எட்வர்ட் ஸ்னோடன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட எட்வர்ட் ஸ்னோடன். 2013ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவில் இருந்து வருகிறார். இவர், சமீபத்தில் இணையத்தளம் ஒன்றில் வெளியிட்டுள்ள கட்டுரையில் ஒசாமா பின்லேடன் சாகவில்லை என்ற பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது கட்டுரையில் அமெரிக்கா குறித்து பல குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்துள்ளார். குறிப்பாக ஒசாமா பின்லேடன் சொகுசாக வாழ்வதற்காக, சிஐஏ மாதந்தோறும் 100,000இற்கும் மேற்பட்ட அமெரிக்க டொலர்களை நிதியாக அளித்து வருகிறது. இந்த தொகை சில தொழிலதிபர்கள் மற்றும் அமைப்புக்கள் மூலம் நாஸாக் வங்கிக் கணக்கு வழியாக அனுப்பப்படுகிறது.
ஒசாமா எங்கிருக்கிறார் என எனக்கு சரியாக தெரியாது. ஆனால், 2013ஆம் ஆண்டிலிருந்து தனது 5 மனைவிகள் மற்றும் ஏராளமான குழந்தைகளுடன் அமெரிக்க உளவுத்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறார்.
இதற்கு என்னிடம் பல ஆதாரங்கள் உள்ளன. அவரைக் கொன்று விட்டதாக அமெரிக்கா நாடகம் ஆடுகிறது. இதற்கு பாகிஸ்தான் ரகசிய அமைப்பும் உடந்தை. என தெரிவித்துள்ளர்.
ஒசாமாவின் உடலையும் யாரிடமும் அவர்கள் காண்பிக்கவில்லை. இவைகளை பயன்படுத்தி தான் ஒசாமாவை தலைமறைவாக்கி உள்ளனர். தாடி இல்லாமல், இராணுவ உடையில் இருப்பதால் அவரை யாரும் இதுவரை அடையாளம் காண முடியவில்லை. போலியான ஆவணங்களை வெளியிட்டதால் அவர் இறந்து விட்டதாக அனைவரும் நம்பி விட்டனர்.
ஒசாமா உயிருடன் இருப்பதற்கான பல ஆதாரங்களையும், அமெரிக்கா ஒசாமா வுக்கு உதவி வருவதற்கான ஆதாரங்கள் அடங்கிய புத்தகத்தை செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஒசாமா பின்லேடன் இன்னும் சாகவில்லையாம் : பரபரப்பு தகவல்...
Reviewed by Author
on
September 01, 2015
Rating:

No comments:
Post a Comment